• Mar 03 2025

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும்; நாமல் ஆலோசணை..!

Sharmi / Mar 2nd 2025, 7:25 pm
image

தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும்,அமைச்சர்களும் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொழிற்சங்கத்தினர், வர்த்தக சமூகம், சிவில் சமூக அமைப்புகள், இளம் தலைமுறையினர் ஆகியோரின் கருத்துக்களைச் செவிமடுக்காத காரணத்தினாலேயே நாங்கள் உருவாக்கிய அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தது.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும், அமைச்சர்களும் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்து எல்லாத் தவறுகளுக்கும் எங்கள் மீதே குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

தற்போதைக்கு ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கும் நாங்கள் தான் காரணம் என்று கூறப் போகின்றார்களோ தெரியாது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.


தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும்; நாமல் ஆலோசணை. தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும்,அமைச்சர்களும் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தொழிற்சங்கத்தினர், வர்த்தக சமூகம், சிவில் சமூக அமைப்புகள், இளம் தலைமுறையினர் ஆகியோரின் கருத்துக்களைச் செவிமடுக்காத காரணத்தினாலேயே நாங்கள் உருவாக்கிய அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தது.எனவே தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும், அமைச்சர்களும் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்து எல்லாத் தவறுகளுக்கும் எங்கள் மீதே குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.தற்போதைக்கு ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கும் நாங்கள் தான் காரணம் என்று கூறப் போகின்றார்களோ தெரியாது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement