• May 02 2024

கொழும்பு கடற்கரையில் காத்திருக்கும் ஆபத்து - சுற்றுலாவுக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை! samugammedia

Chithra / Jul 3rd 2023, 11:02 am
image

Advertisement

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ கடற் கரையோரத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லிமீன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அலைகளில் மிதிக்காமலும் கடல்நீரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் மீனவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெல்லி மீன்கள், மனித உடலில் பட்டால் கடுமையான அரிப்பு ஏற்படும். அத்துடன் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், குவித்து கிடக்கும் பொருட்களை மிதிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.


ஆழ்கடலில் இந்த ஜெல்லி மீன்கள் வாழ்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள பருவமழையை அடுத்த கடல் அலைகளுடன் குறித்த மீன்கள் கரையை நோக்கி இழுத்து செல்லப்படுகின்றன.

கடற்கரையிலுள்ள மணலில் ஜெல்லி மீன்கள் புதைந்துள்ளமையால் அங்கு சுற்றுலாவுக்கு செல்லும் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

கொழும்பு கடற்கரையில் காத்திருக்கும் ஆபத்து - சுற்றுலாவுக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை samugammedia கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ கடற் கரையோரத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லிமீன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் அலைகளில் மிதிக்காமலும் கடல்நீரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் மீனவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜெல்லி மீன்கள், மனித உடலில் பட்டால் கடுமையான அரிப்பு ஏற்படும். அத்துடன் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், குவித்து கிடக்கும் பொருட்களை மிதிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.ஆழ்கடலில் இந்த ஜெல்லி மீன்கள் வாழ்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள பருவமழையை அடுத்த கடல் அலைகளுடன் குறித்த மீன்கள் கரையை நோக்கி இழுத்து செல்லப்படுகின்றன.கடற்கரையிலுள்ள மணலில் ஜெல்லி மீன்கள் புதைந்துள்ளமையால் அங்கு சுற்றுலாவுக்கு செல்லும் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement