• Nov 16 2024

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு விடுத்த கோரிக்கை வெற்றி- சுகாஸ் தெரிவிப்பு..!

Sharmi / Sep 24th 2024, 8:05 pm
image

கடந்த ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையினை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அக் கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் அதிகுறைந்த  வாக்களிப்பு வீதம் இடம்பெற்ற மாவட்டமாக யாழ்ப்பாணம் மாகாணங்களாக வடக்கு கிழக்கு காணப்படுகின்றமைக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புறக்கணிப்புக் கோரிக்கையே காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கையை ஏற்று வாக்களிக்காது புறக்கணித்த மக்களின் வீதத்தையும், தவறான சக்திகளால் தவறாக வழிநடாத்தப்பட்டாலும் தமிழ்த் தேசியத்திற்காக வாக்களிப்பதாக எண்ணித் தமிழ் மக்களால் சங்கிற்கு  வழங்கப்பட்ட வாக்குகளும், சஜித் பிரேமதாசா வெற்றிபெற்றால் தமிழருக்குச் சமஷ்டி தருவார் என்று சுமந்திரன் அவர்கள் கூறிய பொய்யை நம்பி, சஜித் தமிழர்கள் கூறியது வாக்குகளும்  தமிழ்த் தேசியத்திற்கான வாக்குகளாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஆகவே தமிழ்த் தேசியம் தோற்கவில்லை - தோற்காது என்பதையே இந்தத் தேர்தல் மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளது.

சரியான தமிழ்த் தலைமையை மக்கள் இனங்கண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கையை ஏற்று, இத்தேர்தலை வடக்குக் கிழக்குத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தால் தமிழ்த் தேசத்தின் காத்திரமான நிலைப்பாடு பறைசாற்றப்பட்டிருக்கும்.

தவறுகளைத் திருத்துவோம்! சரியான தமிழ்த் தலைமையின் பின்னால் அணிதிரள்வோம்! இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை' எனவும்  கே.சுகாஸ்  எக்ஸ் பதிவில்  குறிப்பிட்டுள்ளார்.  



ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு விடுத்த கோரிக்கை வெற்றி- சுகாஸ் தெரிவிப்பு. கடந்த ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையினை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.இது தொடர்பில் அக் கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் அதிகுறைந்த  வாக்களிப்பு வீதம் இடம்பெற்ற மாவட்டமாக யாழ்ப்பாணம் மாகாணங்களாக வடக்கு கிழக்கு காணப்படுகின்றமைக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புறக்கணிப்புக் கோரிக்கையே காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கையை ஏற்று வாக்களிக்காது புறக்கணித்த மக்களின் வீதத்தையும், தவறான சக்திகளால் தவறாக வழிநடாத்தப்பட்டாலும் தமிழ்த் தேசியத்திற்காக வாக்களிப்பதாக எண்ணித் தமிழ் மக்களால் சங்கிற்கு  வழங்கப்பட்ட வாக்குகளும், சஜித் பிரேமதாசா வெற்றிபெற்றால் தமிழருக்குச் சமஷ்டி தருவார் என்று சுமந்திரன் அவர்கள் கூறிய பொய்யை நம்பி, சஜித் தமிழர்கள் கூறியது வாக்குகளும்  தமிழ்த் தேசியத்திற்கான வாக்குகளாகவே பார்க்கப்பட வேண்டும். ஆகவே தமிழ்த் தேசியம் தோற்கவில்லை - தோற்காது என்பதையே இந்தத் தேர்தல் மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளது. சரியான தமிழ்த் தலைமையை மக்கள் இனங்கண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கையை ஏற்று, இத்தேர்தலை வடக்குக் கிழக்குத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தால் தமிழ்த் தேசத்தின் காத்திரமான நிலைப்பாடு பறைசாற்றப்பட்டிருக்கும். தவறுகளைத் திருத்துவோம் சரியான தமிழ்த் தலைமையின் பின்னால் அணிதிரள்வோம் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை' எனவும்  கே.சுகாஸ்  எக்ஸ் பதிவில்  குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement