• Nov 14 2024

அச்சுறுத்தும் எம்பொக்ஸ் வைரஸ்; இலங்கையில் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை - விமான நிலையங்களில் விசேட பாதுகாப்பு

Chithra / Aug 19th 2024, 9:11 am
image

 

உலகளாவிய ரீதியில் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எம்பொக்ஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது. 

அதேநேரம் இதற்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொங்கோ குடியரசில் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலினால் பலியானோர் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15,664 ஆக அதிகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக மத ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை மேற்கொள்வதால் நோய் பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


அச்சுறுத்தும் எம்பொக்ஸ் வைரஸ்; இலங்கையில் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை - விமான நிலையங்களில் விசேட பாதுகாப்பு  உலகளாவிய ரீதியில் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எம்பொக்ஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது. அதேநேரம் இதற்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இதேவேளை கொங்கோ குடியரசில் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலினால் பலியானோர் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15,664 ஆக அதிகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக மத ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை மேற்கொள்வதால் நோய் பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement