• May 19 2024

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இறுதியானது அல்ல..! எதிர்காலத்திலும் தாக்குதல்கள் இடம்பெறலாம்! பாதுகாப்பு அமைச்சு பரபரப்பு தகவல் samugammedia

Chithra / Sep 22nd 2023, 10:43 am
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இலங்கையில் இடம்பெற்ற இறுதியான தாக்குதல் என்று குறிப்பிட முடியாது. அடிப்படைவாத கொள்கையுடையவர்கள் நாட்டிலும் உள்ளார்கள். நாட்டுக்கு வெளியிலும் உள்ளார்கள். எதிர்காலத்திலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

ஆகவே, புலனாய்வு பிரிவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்கள் தெரிவிப்பதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். புலனாய்வு பிரிவினர் விழிப்புடன் செயற்பட வேண்டும் .

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்த முன்னர் தற்கொலை குண்டுதாரிகள் 2021.04.20 ஆம் திகதி கல்கிஸ்சை பகுதியில் ஒன்றிணைந்து  உறுதிப்பிரமாணத்தை பதிவு  செய்து தாங்கள் ஏன்  தற்கொலை குண்டுதாரிகளாக மாறினோம் என்பதற்கான 10 காரணிகளை குறிப்பிட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

நியூசிலாந்து  பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையிலும், மேற்குலகத்தில் முஸ்லிம் கொலை செய்து விட்டு இலங்கையில் விடுமுறையை கழிக்கும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதலை தாம் நடத்துவதாக தற்கொலை குண்டுதாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தாக்குதல்தாரிகள் குண்டுதாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் தமது உறவினர்களுக்கு குரல் பதிவுகளை அனுப்பி வைத்துள்ளார்கள். 

கடவுளின் மார்க்கத்துக்கு அமையவே உயிர், உடல் மற்றும் சொத்துக்களை தாம் தியாகம் செய்வதாகவும் இதனால் தமது குடும்பத்தாரும், இலங்கையில் வாழும் முஸ்லிம்களும் பல நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள் என்பதை அறிவோம். இருப்பினும் கடவுளின் மார்க்கத்தை தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் ஒரு சில ஆற்றிய உரை கவலைக்குரியது. தேசிய பாதுகாப்பையும், புலனாய்வு பிரிவினையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இதற்காக மன்னிப்பு கோருகிறேன். 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இலங்கையில் இடம்பெற்றது இறுதியானது  ஒன்றல்ல என்று குறிப்பிட முடியாது. என்றார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இறுதியானது அல்ல. எதிர்காலத்திலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் பாதுகாப்பு அமைச்சு பரபரப்பு தகவல் samugammedia உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இலங்கையில் இடம்பெற்ற இறுதியான தாக்குதல் என்று குறிப்பிட முடியாது. அடிப்படைவாத கொள்கையுடையவர்கள் நாட்டிலும் உள்ளார்கள். நாட்டுக்கு வெளியிலும் உள்ளார்கள். எதிர்காலத்திலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.ஆகவே, புலனாய்வு பிரிவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்கள் தெரிவிப்பதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். புலனாய்வு பிரிவினர் விழிப்புடன் செயற்பட வேண்டும் .பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்த முன்னர் தற்கொலை குண்டுதாரிகள் 2021.04.20 ஆம் திகதி கல்கிஸ்சை பகுதியில் ஒன்றிணைந்து  உறுதிப்பிரமாணத்தை பதிவு  செய்து தாங்கள் ஏன்  தற்கொலை குண்டுதாரிகளாக மாறினோம் என்பதற்கான 10 காரணிகளை குறிப்பிட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.நியூசிலாந்து  பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையிலும், மேற்குலகத்தில் முஸ்லிம் கொலை செய்து விட்டு இலங்கையில் விடுமுறையை கழிக்கும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதலை தாம் நடத்துவதாக தற்கொலை குண்டுதாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.தாக்குதல்தாரிகள் குண்டுதாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் தமது உறவினர்களுக்கு குரல் பதிவுகளை அனுப்பி வைத்துள்ளார்கள். கடவுளின் மார்க்கத்துக்கு அமையவே உயிர், உடல் மற்றும் சொத்துக்களை தாம் தியாகம் செய்வதாகவும் இதனால் தமது குடும்பத்தாரும், இலங்கையில் வாழும் முஸ்லிம்களும் பல நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள் என்பதை அறிவோம். இருப்பினும் கடவுளின் மார்க்கத்தை தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் ஒரு சில ஆற்றிய உரை கவலைக்குரியது. தேசிய பாதுகாப்பையும், புலனாய்வு பிரிவினையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இதற்காக மன்னிப்பு கோருகிறேன். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இலங்கையில் இடம்பெற்றது இறுதியானது  ஒன்றல்ல என்று குறிப்பிட முடியாது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement