வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் கடந்த காலங்களில் எழுச்சி பெற்றிருந்த மாணவர்களின் கல்வி, தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலை தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - பத்தாம்குறிச்சி, அறிவொளிமையம் கல்வி நிலையத்தில், கல்வி பயிலும் மாணவர்கள் தமது கல்விச் சுற்றுலாவின்போது, முல்லைத்தீவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த மாணவர்கள் நேற்றையதினம்(29) நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்குசென்றதுடன், கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் மாணவர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வித்தரம் முன்னிலையில் இருந்தது.
ஆனால் தற்போது வடக்கு, கிழக்கில் எமது மாணவர்களின் கல்வித்தரம் குறைவடைந்து செல்கின்ற நிலைகளைக் காண்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும்.
எனவே அனைவரும் கல்வி கற்க வேண்டும், சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும், உயர்ந்த நிலைகளைப் பெறவேண்டும் என்பதே மாணவர்கள் அனைவரதும் ஒரே இலக்காக இருக்கவேண்டும்.
எமது மாணவர்கள் கல்வியில் பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற நிலைகளைக் கடந்து தேசிய ரீதியிலும் வெற்றிபெறவேண்டும்.
மாணவர்கள் சிறந்தமுறையில் கல்விகற்பதற்காக உதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், புலம்பெயர் உறவுகள் என அனைவரும் தயாராக இருக்கின்றோம்.
இவ்வாறிருக்கும்போது வடக்கு, கிழக்கு மாணவர்கள் தேசியரீதியில் முதல்நிலை பெற்றார்கள் என்ற நிலையை ஏன் ஏற்படுத்தமுடியாது. அது மாணவர்களான உங்களின் கைகளிலேயே இருக்கின்றது.
அதேவேளை கல்வியில் சிறந்து விளங்குவதைப்போல, ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கவேண்டும். வடக்கு, கிழக்குத் தமிழ் பிள்ளைகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள் என்ற நிலையைக் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு எமது மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கும் போது எமது அடுத்தடுத்த சந்ததியினர் சிறந்து விளங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழர் தாயகத்தில் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி;ரவிகரன் எம்.பி ஆதங்கம். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் கடந்த காலங்களில் எழுச்சி பெற்றிருந்த மாணவர்களின் கல்வி, தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலை தெரிவித்துள்ளார்.திருகோணமலை - பத்தாம்குறிச்சி, அறிவொளிமையம் கல்வி நிலையத்தில், கல்வி பயிலும் மாணவர்கள் தமது கல்விச் சுற்றுலாவின்போது, முல்லைத்தீவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த மாணவர்கள் நேற்றையதினம்(29) நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்குசென்றதுடன், கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டிருந்தனர்.குறித்த கலந்துரையாடலில் மாணவர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வித்தரம் முன்னிலையில் இருந்தது.ஆனால் தற்போது வடக்கு, கிழக்கில் எமது மாணவர்களின் கல்வித்தரம் குறைவடைந்து செல்கின்ற நிலைகளைக் காண்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும்.எனவே அனைவரும் கல்வி கற்க வேண்டும், சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும், உயர்ந்த நிலைகளைப் பெறவேண்டும் என்பதே மாணவர்கள் அனைவரதும் ஒரே இலக்காக இருக்கவேண்டும்.எமது மாணவர்கள் கல்வியில் பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற நிலைகளைக் கடந்து தேசிய ரீதியிலும் வெற்றிபெறவேண்டும்.மாணவர்கள் சிறந்தமுறையில் கல்விகற்பதற்காக உதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், புலம்பெயர் உறவுகள் என அனைவரும் தயாராக இருக்கின்றோம்.இவ்வாறிருக்கும்போது வடக்கு, கிழக்கு மாணவர்கள் தேசியரீதியில் முதல்நிலை பெற்றார்கள் என்ற நிலையை ஏன் ஏற்படுத்தமுடியாது. அது மாணவர்களான உங்களின் கைகளிலேயே இருக்கின்றது.அதேவேளை கல்வியில் சிறந்து விளங்குவதைப்போல, ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கவேண்டும். வடக்கு, கிழக்குத் தமிழ் பிள்ளைகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள் என்ற நிலையைக் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு எமது மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கும் போது எமது அடுத்தடுத்த சந்ததியினர் சிறந்து விளங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.