• May 13 2024

நாட்டில் தீராப் பிரச்சினையாக மாறியுள்ள முட்டை விவகாரம்!

Sharmi / Dec 30th 2022, 11:46 am
image

Advertisement

ஒரு முட்டையை இறக்குமதி செய்து 25 ரூபாவிற்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்து அந்த விலையில் வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும், பெரிய அளவிலான முட்டை உற்பத்தி நிறுவனங்கள் செயற்கையாக முட்டை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.

மூலப்பொருட்கள் உள்ளிட்ட முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் குழு முட்டை உற்பத்தியில் இருந்து விலகியுள்ளதாகவும் முட்டை உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் பாரிய முட்டை உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை எனவும் தற்போது முட்டை விற்பனையில் பாரியளவில் இலாபம் ஈட்டி வருவதாகவும் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கேக் மற்றும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அளவு முட்டைகள் சந்தையில் கிடைப்பதில்லை என்றும், தற்போது முட்டைகள் தேவையான அளவில் 50 சதவீதம் வழங்கப்படுவதாகவும், முட்டைகள் இல்லாததால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உற்பத்தியாளர்கள் கேக் உள்ளிட்ட முட்டைகள் தேவைப்படும் பேக்கரி பொருட்களை நிறுத்தியுள்ளனர்

முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலையை குறைக்க முட்டையை இறக்குமதி செய்வதை தவிர வேறு வழியில்லை என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தீராப் பிரச்சினையாக மாறியுள்ள முட்டை விவகாரம் ஒரு முட்டையை இறக்குமதி செய்து 25 ரூபாவிற்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்து அந்த விலையில் வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும், பெரிய அளவிலான முட்டை உற்பத்தி நிறுவனங்கள் செயற்கையாக முட்டை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.மூலப்பொருட்கள் உள்ளிட்ட முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் குழு முட்டை உற்பத்தியில் இருந்து விலகியுள்ளதாகவும் முட்டை உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் பாரிய முட்டை உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை எனவும் தற்போது முட்டை விற்பனையில் பாரியளவில் இலாபம் ஈட்டி வருவதாகவும் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.மேலும், கேக் மற்றும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அளவு முட்டைகள் சந்தையில் கிடைப்பதில்லை என்றும், தற்போது முட்டைகள் தேவையான அளவில் 50 சதவீதம் வழங்கப்படுவதாகவும், முட்டைகள் இல்லாததால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உற்பத்தியாளர்கள் கேக் உள்ளிட்ட முட்டைகள் தேவைப்படும் பேக்கரி பொருட்களை நிறுத்தியுள்ளனர்முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலையை குறைக்க முட்டையை இறக்குமதி செய்வதை தவிர வேறு வழியில்லை என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement