• Oct 27 2024

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி சற்று முன் ஆரம்பமானது! samugammedia

Tamil nila / Sep 6th 2023, 9:14 am
image

Advertisement

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (06.09.2023) ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டதற்கமைய காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது.


குறித்த சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் முன்னிலையில் அகழ்வு பணி ஆரம்பமாகியுள்ளது.



நிலைமைகளை அவதானிப்பாளர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசு கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கி.சிவகுரு ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.




கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி சற்று முன் ஆரம்பமானது samugammedia கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (06.09.2023) ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டதற்கமைய காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது.குறித்த சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் முன்னிலையில் அகழ்வு பணி ஆரம்பமாகியுள்ளது.நிலைமைகளை அவதானிப்பாளர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசு கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கி.சிவகுரு ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement