• Oct 23 2024

ஒரே நாளில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட அதிவேக உயர்வு! samugammedia

Chithra / May 31st 2023, 1:45 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(31.05.2023) மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தை காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. 

எனினும் நேற்றையதினம் அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானிய பவுண்ட் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(31.05.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.92 ரூபாவாகவும், கொள்வனவு விலை 287.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 306.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 374.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 355.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


ஒரே நாளில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட அதிவேக உயர்வு samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(31.05.2023) மேலும் அதிகரித்துள்ளது.இதற்கு முந்தை காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. எனினும் நேற்றையதினம் அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானிய பவுண்ட் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.அதனைத் தொடர்ந்து இன்று ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(31.05.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.92 ரூபாவாகவும், கொள்வனவு விலை 287.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 306.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 374.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 355.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement