• Apr 21 2025

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவருக்கு ஏற்பட்ட கதி; விரைந்து காப்பாற்றிய பொலிஸார்!

Chithra / Apr 17th 2025, 10:22 am
image


யாழ்ப்பாணம்- காரைநகர் கடலில் குளித்துக்கொண்டிருந்த போது  திடீரென நீரில் மூழ்கிய நபரொருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு குழுவினர் சுற்றுலாவிற்காக வருகை தந்துள்ளனர்.

இதன்போது, 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காரைநகர் கடலில் நீராடிக் கொண்டிருந்தவேளை  திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட உயிர் காக்கும் பொலிஸார் அவரை தண்ணீரில் இருந்து மீட்டு முதலுதவி அளித்தனர்.

பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவருக்கு ஏற்பட்ட கதி; விரைந்து காப்பாற்றிய பொலிஸார் யாழ்ப்பாணம்- காரைநகர் கடலில் குளித்துக்கொண்டிருந்த போது  திடீரென நீரில் மூழ்கிய நபரொருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.குறித்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு குழுவினர் சுற்றுலாவிற்காக வருகை தந்துள்ளனர்.இதன்போது, 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காரைநகர் கடலில் நீராடிக் கொண்டிருந்தவேளை  திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட உயிர் காக்கும் பொலிஸார் அவரை தண்ணீரில் இருந்து மீட்டு முதலுதவி அளித்தனர்.பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement