• May 18 2024

மட்டு போரதீவுப்பற்று பிரதேசபையின் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு..!samugammedia

Sharmi / Jun 29th 2023, 2:11 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசபையின் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(29) வெல்லாவெளியில் நடைபெற்றது.

கடந்த கொரனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உலக வங்கியின் சுமார் 33மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசசபையினால் இந்த கலாசார மண்டபத்திற்கான வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் கௌரிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.இராகுலநாயகி,பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் இணைப்பு செயலாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளுக்கு ஆளும்கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதாக இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் காணிவிடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு என பல்வேறுபட்ட தமிழ் மக்கள் நலன்சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மறுக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.




மட்டு போரதீவுப்பற்று பிரதேசபையின் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.samugammedia மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசபையின் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(29) வெல்லாவெளியில் நடைபெற்றது.கடந்த கொரனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.உலக வங்கியின் சுமார் 33மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.போரதீவுப்பற்று பிரதேசசபையினால் இந்த கலாசார மண்டபத்திற்கான வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் கௌரிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.இராகுலநாயகி,பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் இணைப்பு செயலாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளுக்கு ஆளும்கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதாக இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.இந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் காணிவிடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு என பல்வேறுபட்ட தமிழ் மக்கள் நலன்சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மறுக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement