• Aug 27 2025

வைரத்தில் ஜொலிக்கும் விநாயகர் சிலை; அசத்திய கலைஞர்

Chithra / Aug 27th 2025, 10:54 am
image


நாடு முழுவதும் இன்று  விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். 

இந்நிலையில்  விற்பனைக்காக பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளனர்.

அதன்படி  கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வரும் மராட்டியத்தை சேர்ந்த மகேஷ் முரகோடா என்ற கலைஞர் வைரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். 

சுமார்  6 லட்சம் ரூபா மதிப்பிலான அமெரிக்க வைரத்தில் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விநாயகர் சிலையின் எடை 50 கிலோ ஆகும். 

இந்த விநாயகர் சிலை பெங்களூரு தெற்கு ராமநகரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் நாடபிரபு கெம்பேகவுடா மித்ரா சபை சார்பில் நிறுவப்படுகிறது. 

பின்னர் அந்த சிலை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.


வைரத்தில் ஜொலிக்கும் விநாயகர் சிலை; அசத்திய கலைஞர் நாடு முழுவதும் இன்று  விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில்  விற்பனைக்காக பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளனர்.அதன்படி  கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வரும் மராட்டியத்தை சேர்ந்த மகேஷ் முரகோடா என்ற கலைஞர் வைரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். சுமார்  6 லட்சம் ரூபா மதிப்பிலான அமெரிக்க வைரத்தில் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த விநாயகர் சிலையின் எடை 50 கிலோ ஆகும். இந்த விநாயகர் சிலை பெங்களூரு தெற்கு ராமநகரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் நாடபிரபு கெம்பேகவுடா மித்ரா சபை சார்பில் நிறுவப்படுகிறது. பின்னர் அந்த சிலை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement