யாழ் தென்மராட்சி மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை(27) பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே மிருசுவில் வடக்கு இளைஞர்களால் குறித்த கிணறு மூடப்பட்டு, அவ்வீட்டிற்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்மராட்சி மிருசுவில் வடக்கு, மிருசுவிலில் வசித்து வந்த சசிகரன் கிங்சிகா என்ற 6வயது சிறுமி கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து சிறுமியை காணாத நிலையில் பெற்றோர்கள் தேடிய போது கிணற்றில் சிறுமி வீழ்ந்தமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக குறித்த சிறுமி மீட்கப்பட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
இந் நிலையில் மிருசுவில் வடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊர்மக்களின் பங்களிப்புடன் இன்றையதினம் அவ்வீட்டிற்கு புதிதாக குழாய்க்கிணறு அடித்துக் கொடுத்துள்ளனர்.
அதேவேளை குழாய்க் கிணறு அமைக்கப்ட்டதையடுத்து உடனடியாக பாதுகாப்பற்ற கிணறு இளைஞர்களால் இடித்து அழிக்கப்பட்டு தூர்வையாக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த இளைஞர்களின் மனிதாபிமான செயற்பாட்டிற்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மிருசுவில் சிறுமி பரிதாப மரணம்.இரவோடு இரவாக கிணற்றை இடித்தழித்து குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்த இளைஞர்கள்.samugammedia யாழ் தென்மராட்சி மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை(27) பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே மிருசுவில் வடக்கு இளைஞர்களால் குறித்த கிணறு மூடப்பட்டு, அவ்வீட்டிற்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தென்மராட்சி மிருசுவில் வடக்கு, மிருசுவிலில் வசித்து வந்த சசிகரன் கிங்சிகா என்ற 6வயது சிறுமி கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து சிறுமியை காணாத நிலையில் பெற்றோர்கள் தேடிய போது கிணற்றில் சிறுமி வீழ்ந்தமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக குறித்த சிறுமி மீட்கப்பட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்இந் நிலையில் மிருசுவில் வடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊர்மக்களின் பங்களிப்புடன் இன்றையதினம் அவ்வீட்டிற்கு புதிதாக குழாய்க்கிணறு அடித்துக் கொடுத்துள்ளனர்.அதேவேளை குழாய்க் கிணறு அமைக்கப்ட்டதையடுத்து உடனடியாக பாதுகாப்பற்ற கிணறு இளைஞர்களால் இடித்து அழிக்கப்பட்டு தூர்வையாக்கப்பட்டது.இந்நிலையில் குறித்த இளைஞர்களின் மனிதாபிமான செயற்பாட்டிற்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.