• May 03 2024

யாழ் போதனா வைத்தியசாலையில் கையை இழந்த சிறுமி...! தாதிக்கு பயணத் தடை...! நீதிமன்றம் அதிரடி..!samugammedia

Sharmi / Sep 7th 2023, 3:07 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயணத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

அது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்திய சாலை, வடமாகாண ஆளுநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தினர்.

அதனை தொடர்ந்து, இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நிலையில், பெற்றோர் சார்பில் குறித்த தாதியார் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட மன்று தாதியருக்கு பயணத் தடை விதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.


யாழ் போதனா வைத்தியசாலையில் கையை இழந்த சிறுமி. தாதிக்கு பயணத் தடை. நீதிமன்றம் அதிரடி.samugammedia யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயணத் தடை விதித்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.அது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்திய சாலை, வடமாகாண ஆளுநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தினர். அதனை தொடர்ந்து, இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நிலையில், பெற்றோர் சார்பில் குறித்த தாதியார் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட மன்று தாதியருக்கு பயணத் தடை விதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement

Advertisement

Advertisement