• Nov 18 2024

அரசாங்கம் நெற்களஞ்சிய சபை ஊடாக இதுவரை கிளிநொச்சியில் நெற்கொள்வனவு செய்ததில்லை - கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் யதீஸ்வரன் தெரிவிப்பு

Tharun / Mar 14th 2024, 8:38 pm
image

நெற்கொள்வனவு சபை மூலமாக நெல் கொள்வனவு செய்யப்படும்  என அரசாங்கம் அறிவிக்குமே தவிர இதுவரையில் இந்த அரசாங்கமும்  கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்கொள்வனவு செய்யவில்லை என கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத்தில் தலைவர்  சுப்பிரமணியம் யதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று(14) பத்திரிகையாளர் சந்திப்பினை மேற்கொண்டிருந்த அவர் மேலும் தெரிவித்ததாவது.

இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்கொள்வனவு சபையின் நெற்களஞ்சிய சாலைகள் திறந்திருந்தன. நேற்று பிற்பகல் குறிப்பிட்ட விலையில் நெல் கொள்வனவு செய்யப்படும் என அரசாங்கம் விவசாய அமைச்சினால் அறிவித்திருந்ததன் பின்னர் மேற்படி சபையின் நெற்களஞ்சிய சாலைகள் இன்று திறந்திருந்தன. முன்னரும் அரசாங்கம் நெற்கொள்வனவு செய்யப்படும் என அறிவிக்கும் ஆனால் நெல் கெள்வனவு செய்யாது.  இதுவரை காலமும் இந்த அரசாங்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில்  நெல் கொள்வனவு செய்யப்படவில்லை.

கடந்த காலத்தில் நெற்பயிர்கள் அழிவடைந்து எஞ்சிய நெற்களை தகுந்த விலையில் பெற்றுக்கொள்ளுமாறு விவசாயிகள் அரசாங்கத்திடம் இறைஞ்சிக் கேட்டிருந்தனர். ஆனால் அப்போது பாராமுகமாக இருந்த அரசாங்கம். அந்த நெல்லினை கொள்வனவு செய்யாத அரசாங்கம். இன்று தேர்தல் ஒன்று நடக்கவிருக்கின்ற நேரத்தில் தாம் நெற்கொள்வனவு செய்வதாக பாசாங்கு செய்வதற்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இது எமது விவசாயிகளை ஏமாற்றும் செயல். எமது விவசாயிகளின் நெல் அறுவடைக்காலம் மாசி மாதத்துடன் நிறைவுக்கு வந்துவிட்டது. அவர்கள் தமது நெல்லை தென்பகுதி நிறுவனங்களுக்கு விற்றுவிட்டனர். இந்த நிலையில் அவர்கள் தம்மிடம் இருந்த நெற்களை விற்றதன் பிற்பாடு ஏன்  இந்த அரசாங்கம் நெல் கொள்வனவிற்கான, போலி நாடகத்திற்காக களஞ்சியங்களை திறந்து வைத்துள்ளது. என்றார்.

அரசாங்கம் நெற்களஞ்சிய சபை ஊடாக இதுவரை கிளிநொச்சியில் நெற்கொள்வனவு செய்ததில்லை - கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் யதீஸ்வரன் தெரிவிப்பு நெற்கொள்வனவு சபை மூலமாக நெல் கொள்வனவு செய்யப்படும்  என அரசாங்கம் அறிவிக்குமே தவிர இதுவரையில் இந்த அரசாங்கமும்  கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்கொள்வனவு செய்யவில்லை என கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத்தில் தலைவர்  சுப்பிரமணியம் யதீஸ்வரன் தெரிவித்தார்.இன்று(14) பத்திரிகையாளர் சந்திப்பினை மேற்கொண்டிருந்த அவர் மேலும் தெரிவித்ததாவது.இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்கொள்வனவு சபையின் நெற்களஞ்சிய சாலைகள் திறந்திருந்தன. நேற்று பிற்பகல் குறிப்பிட்ட விலையில் நெல் கொள்வனவு செய்யப்படும் என அரசாங்கம் விவசாய அமைச்சினால் அறிவித்திருந்ததன் பின்னர் மேற்படி சபையின் நெற்களஞ்சிய சாலைகள் இன்று திறந்திருந்தன. முன்னரும் அரசாங்கம் நெற்கொள்வனவு செய்யப்படும் என அறிவிக்கும் ஆனால் நெல் கெள்வனவு செய்யாது.  இதுவரை காலமும் இந்த அரசாங்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில்  நெல் கொள்வனவு செய்யப்படவில்லை.கடந்த காலத்தில் நெற்பயிர்கள் அழிவடைந்து எஞ்சிய நெற்களை தகுந்த விலையில் பெற்றுக்கொள்ளுமாறு விவசாயிகள் அரசாங்கத்திடம் இறைஞ்சிக் கேட்டிருந்தனர். ஆனால் அப்போது பாராமுகமாக இருந்த அரசாங்கம். அந்த நெல்லினை கொள்வனவு செய்யாத அரசாங்கம். இன்று தேர்தல் ஒன்று நடக்கவிருக்கின்ற நேரத்தில் தாம் நெற்கொள்வனவு செய்வதாக பாசாங்கு செய்வதற்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இது எமது விவசாயிகளை ஏமாற்றும் செயல். எமது விவசாயிகளின் நெல் அறுவடைக்காலம் மாசி மாதத்துடன் நிறைவுக்கு வந்துவிட்டது. அவர்கள் தமது நெல்லை தென்பகுதி நிறுவனங்களுக்கு விற்றுவிட்டனர். இந்த நிலையில் அவர்கள் தம்மிடம் இருந்த நெற்களை விற்றதன் பிற்பாடு ஏன்  இந்த அரசாங்கம் நெல் கொள்வனவிற்கான, போலி நாடகத்திற்காக களஞ்சியங்களை திறந்து வைத்துள்ளது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement