• Apr 13 2025

சலுகைகள் மூலம் வடக்கில் தேர்தலை வெற்றி கொள்ள முயற்சிக்கிறது அரசு! குற்றம்சாட்டும் சபா குகதாஸ்

Chithra / Apr 12th 2025, 2:51 pm
image



எதிர்பாராத வெற்றி சரிவை சந்திக்கிறது என்ற அளவீட்டை உணர்ந்த அநுர அரசாங்கம் வடக்கில் பல சலுகை உத்தரவாதங்களை அள்ளி வீசுவது மாத்திரமல்ல அதற்காக தெற்கில் இருந்து பல முக்கியஸ்தர்கள் குழுக்களையும் அனுப்பி வருகின்றனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

கடந்த கால ஆட்சியாளர்களை விமர்சித்து ஊழல் அற்ற ஆட்சியை வழங்குவோம் என கூறிய அநுரகுமார அரசாங்கம்  பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அவர்களது செயல்திறன்கள் பேச்சளவில் நின்றதுடன் மாறாக அரிசி, தேங்காய் , உப்பு ,போன்ற மிக அத்தியாவசிய பொருட்கள் பல மடங்கு விலை அதிகரித்ததுடன் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தலைகீழாக மாறியது.

எதிர்பாராத வெற்றி சரிவை சந்திக்கிறது என்ற அளவீட்டை உணர்ந்த அநுர அரசாங்கம் வடக்கில் பல சலுகை உத்தரவாதங்களை அள்ளி வீசுவது மாத்திரமல்ல அதற்காக தெற்கில் இருந்து பல முக்கியஸ்தர்கள் குழுக்களையும் அனுப்பி வருகின்றனர்.

கடந்த ஆட்சியாளர்கள் சலுகைகளை தேர்தல் காலங்களில் வழங்கினார்கள் உத்தரவாதங்களை கொடுத்தார்கள் என எதிர் அணியில் இருந்து விமர்சித்த அநுர இன்று அப்போதைய ஆட்சியாரின் செயற்பாட்டை கையில் எடுத்து வடக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளை கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றது.

தேர்தல் விதி முறைக்கு மாறாக  ஆலயங்களில் தேர்தல் பிரசார கூட்டங்களையும் அதனை நடாத்த இராணுவ இயந்திரத்தையும் பயன்படுத்துகின்றனர்.

கடற்றொழில் அமைச்சு என தலைப்பிட்ட கடிதம் மூலம் சகல வட்டாரங்களிலும் எண்ணற்ற வீதிகள் புனரமைப்பதற்கு சிபார்சு செய்யப்பட்டதாக வீதீயில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கடிதங்களின் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதாகவும் ஏலவே இருக்கின்ற மைதானங்களை நவீன முறையில் மாற்றுவதாகவும் கூறி தெற்கில் இருந்து அமைச்சர் தலைமையில்  ஒரு குழு  பார்வையிட்டு ஊடகங்களில் அதனை பரப்புரையாக மாற்றியுள்ளனர்.

இவ்வாறு ஏகப்பட்ட உத்தவாதங்களையும் சலுகைகளையும் வழங்குவதாக கூறி உள்ளூராட்சி தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற நிலையில் அநுர அரசு வடக்கில் முகாமிட்டுள்ளது.

சலுகைகள் மூலம் வடக்கில் தேர்தலை வெற்றி கொள்ள முயற்சிக்கிறது அரசு குற்றம்சாட்டும் சபா குகதாஸ் எதிர்பாராத வெற்றி சரிவை சந்திக்கிறது என்ற அளவீட்டை உணர்ந்த அநுர அரசாங்கம் வடக்கில் பல சலுகை உத்தரவாதங்களை அள்ளி வீசுவது மாத்திரமல்ல அதற்காக தெற்கில் இருந்து பல முக்கியஸ்தர்கள் குழுக்களையும் அனுப்பி வருகின்றனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த கால ஆட்சியாளர்களை விமர்சித்து ஊழல் அற்ற ஆட்சியை வழங்குவோம் என கூறிய அநுரகுமார அரசாங்கம்  பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அவர்களது செயல்திறன்கள் பேச்சளவில் நின்றதுடன் மாறாக அரிசி, தேங்காய் , உப்பு ,போன்ற மிக அத்தியாவசிய பொருட்கள் பல மடங்கு விலை அதிகரித்ததுடன் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தலைகீழாக மாறியது.எதிர்பாராத வெற்றி சரிவை சந்திக்கிறது என்ற அளவீட்டை உணர்ந்த அநுர அரசாங்கம் வடக்கில் பல சலுகை உத்தரவாதங்களை அள்ளி வீசுவது மாத்திரமல்ல அதற்காக தெற்கில் இருந்து பல முக்கியஸ்தர்கள் குழுக்களையும் அனுப்பி வருகின்றனர்.கடந்த ஆட்சியாளர்கள் சலுகைகளை தேர்தல் காலங்களில் வழங்கினார்கள் உத்தரவாதங்களை கொடுத்தார்கள் என எதிர் அணியில் இருந்து விமர்சித்த அநுர இன்று அப்போதைய ஆட்சியாரின் செயற்பாட்டை கையில் எடுத்து வடக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளை கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றது.தேர்தல் விதி முறைக்கு மாறாக  ஆலயங்களில் தேர்தல் பிரசார கூட்டங்களையும் அதனை நடாத்த இராணுவ இயந்திரத்தையும் பயன்படுத்துகின்றனர்.கடற்றொழில் அமைச்சு என தலைப்பிட்ட கடிதம் மூலம் சகல வட்டாரங்களிலும் எண்ணற்ற வீதிகள் புனரமைப்பதற்கு சிபார்சு செய்யப்பட்டதாக வீதீயில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கடிதங்களின் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதாகவும் ஏலவே இருக்கின்ற மைதானங்களை நவீன முறையில் மாற்றுவதாகவும் கூறி தெற்கில் இருந்து அமைச்சர் தலைமையில்  ஒரு குழு  பார்வையிட்டு ஊடகங்களில் அதனை பரப்புரையாக மாற்றியுள்ளனர்.இவ்வாறு ஏகப்பட்ட உத்தவாதங்களையும் சலுகைகளையும் வழங்குவதாக கூறி உள்ளூராட்சி தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற நிலையில் அநுர அரசு வடக்கில் முகாமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement