• Jan 23 2025

இமாலயப் பிரகடனம் திடீரென உருவாகவில்லை; எதிரிகளை நண்பர்களாக்கி இனப்பிரச்சினையை தீர்ப்போம்!

Chithra / Dec 18th 2024, 2:11 pm
image


இமாலயப்  பிரகடனத்தின் நோக்கங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் யாழ் மாவட்டத்திற்கான மாநாடு நேற்றையதினம் மாலை 3 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் இராஜப்பு அந்தோணிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

குறித்த மாநாட்டில்,  இமாலயப் பிரகடனத்தில் கையொப்பமிட்ட வண. வலதர சோபித நாயக தேரர் உள்ளிட்ட தேரர்கள் மற்றும் உலகத்தமிழர் பேரவை  சார்பில்  வேலுப்பிள்ளை குகனேந்திரன் மற்றும் சர்வ மத தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர்.

இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய இராஜப்பு அந்தோணிப்பிள்ளை, தனது உரையில் தெரிவிக்கையில், 

1970 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான ஒரு செயற்பாட்டாளராக செயற்பட்டு வந்துள்ளேன்.


இனப்பிரச்சினைக்கான காரணியாக பரஸ்பர மொழியை கற்றுக்கொள்ள தவறியமையே காரணம் என அறிந்துகொண்டேன்.

நாட்டு மக்கள் என்ற வகையில் இன்று வரை எமக்கிடையில்  முரண்பாடுகள் இதுவரையும் இல்லை, எனினும் கடந்த 76 வருடங்களாக அரசியல்வாதிகளால் மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, எங்கள் மத்தியில் தவறான தகவல்கள் விதைக்கப்பட்டுள்ளது. 

இமாலயப்பிரகடனம் என்பது திடீரென உருவான ஒன்றல்ல. பல வருட காலமாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இது ஆராயப்பட்டது. இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒன்றல்ல.

எங்களுடைய அரசியல், கடந்த தேர்தல் வரை இனப்பிரச்சினையை மையப்படுத்தி தான் முன்னெடுக்கப்பட்டது.


இன்றைய சூழலில் இமாலய பிரகடன செயற்பாட்டாளர்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. எங்களுடைய வருங்கால சந்ததியினருக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் நாம் ஒருவருக்கொருவர் மனந்திறந்து உரையாட வேண்டும்.

நாங்கள் எமக்கிடையில் இருக்கும் வெறுப்பை ஒதுக்கி விட்டு, வருங்கால சந்ததியினருக்கு நல்லதொரு வாய்ப்பை பெற்றுக்கொள்ள விரும்பினால், கடந்த தேர்தலில் வைக்கப்பட்ட ஒரு சொற்றொடர் வளமான வாழ்வு, அழகான நாடு நாங்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் அதை அடைய முடியும்.


கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற காலி முகத்திடல் சம்பவங்கள் நல்லவர்கள் முடிவெடுத்தால் நல்வர்கள் சேர்ந்தால் நடந்த முறைமை மாற்றத்தை  ஏற்படுத்தியது போல நாங்கள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் இந்த மாற்றம் ஒருநாளில் நடப்பதல்ல.  அண்மையில் நடந்த முறைமை மாற்றம் என்பது ஒரு ஆரம்பம் எனவும் அவர் தெரிவித்தார்.

உலகத்தமிழர் பேரவை  சார்பில் வேலுப்பிள்ளை  குகனேந்திரன் உரையாற்றுகையில், 

நான் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்றதும் உலக தமிழ் பேரவை ஆரம்பிக்கப்பட்டதுடன் நான் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இலங்கையின் பிரச்சினைகளை முன்வைத்தேன்.


இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஜெனிவாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம்.

இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை பிரித்து வைத்து அரசியல்வாதிகள் அரசியல் வியாபாரத்தை செய்கின்றனர்.

அதேவேளை நாங்கள் எதிரிகளாக கருதுவது பௌத்த மதகுருமாரை. கடந்த காலத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதியாலேயே பண்டா- செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கொண்டு வந்தார்.


அதேபோன்று டட்லி -செல்வா ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. அதையும் மதகுருமார்களே கிழித்து எறிந்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்தலாம் என கூறியவுடன் பௌத்த மதகுருமார்கள் அதனை நிறுத்துவதற்கு முயன்றார்கள்.  

அதனால் எங்களுக்கு எதிரிகள் பௌத்த மதகுருமார்கள். அவர்களை பொறுத்தமட்டில் புலம்பெயர் தேசத்திலுள்ள நாங்கள் தான் இந்த நாட்டை பிரிப்பதற்கு முயலுவதாக எண்ணுகின்றார்கள்.


அதனால் நாங்கள் இருவரும் எதிரிகள். ஆகையால் அவர்களுடன் கதைப்போம் என  முயன்றோம். எனவே இது தொடர்பில் இலங்கையிலுள்ள நான்கு பௌத்த பீடங்களுடனும் கதைத்து  சமாதானத்தை உண்டாக்குவோம். நாங்கள் எங்கு சந்திப்பது என்பது தான் இன்றுள்ள கேள்வி எனவும் தெரிவித்தார்.

அதேவேளை இந் நிகழ்வில் பங்குபற்றிய சர்வமத தலைவர்கள் உரையாற்றுகையில்,  இலங்கையிலுள்ள அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒன்றாக இருந்து பயணிப்போம், அரசியல், இனம், மொழி பாகுபாடு இன்றி சமாதானத்தை நோக்கி விடியலை நோக்கிப்பயணிக்க வேண்டும் என்ற கருத்துக்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த நிகழ்வில், குறித்த பிரகடனம் தொடர்பிலான விளக்கங்களும், கேள்வி பதில்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதில் பொதுமக்களின் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன. மேலும் இந்த பிரகடனம் தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் விளக்கமளிக்கப்படவேண்டும் என்றும், ஒரு கட்டமைப்பு உருவாக்கி அதனூடாக இமாலயா பிரகடனத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டன.


இமாலயப் பிரகடனம் திடீரென உருவாகவில்லை; எதிரிகளை நண்பர்களாக்கி இனப்பிரச்சினையை தீர்ப்போம் இமாலயப்  பிரகடனத்தின் நோக்கங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் யாழ் மாவட்டத்திற்கான மாநாடு நேற்றையதினம் மாலை 3 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் இராஜப்பு அந்தோணிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.குறித்த மாநாட்டில்,  இமாலயப் பிரகடனத்தில் கையொப்பமிட்ட வண. வலதர சோபித நாயக தேரர் உள்ளிட்ட தேரர்கள் மற்றும் உலகத்தமிழர் பேரவை  சார்பில்  வேலுப்பிள்ளை குகனேந்திரன் மற்றும் சர்வ மத தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர்.இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய இராஜப்பு அந்தோணிப்பிள்ளை, தனது உரையில் தெரிவிக்கையில், 1970 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான ஒரு செயற்பாட்டாளராக செயற்பட்டு வந்துள்ளேன்.இனப்பிரச்சினைக்கான காரணியாக பரஸ்பர மொழியை கற்றுக்கொள்ள தவறியமையே காரணம் என அறிந்துகொண்டேன்.நாட்டு மக்கள் என்ற வகையில் இன்று வரை எமக்கிடையில்  முரண்பாடுகள் இதுவரையும் இல்லை, எனினும் கடந்த 76 வருடங்களாக அரசியல்வாதிகளால் மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, எங்கள் மத்தியில் தவறான தகவல்கள் விதைக்கப்பட்டுள்ளது. இமாலயப்பிரகடனம் என்பது திடீரென உருவான ஒன்றல்ல. பல வருட காலமாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இது ஆராயப்பட்டது. இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒன்றல்ல.எங்களுடைய அரசியல், கடந்த தேர்தல் வரை இனப்பிரச்சினையை மையப்படுத்தி தான் முன்னெடுக்கப்பட்டது.இன்றைய சூழலில் இமாலய பிரகடன செயற்பாட்டாளர்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. எங்களுடைய வருங்கால சந்ததியினருக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் நாம் ஒருவருக்கொருவர் மனந்திறந்து உரையாட வேண்டும்.நாங்கள் எமக்கிடையில் இருக்கும் வெறுப்பை ஒதுக்கி விட்டு, வருங்கால சந்ததியினருக்கு நல்லதொரு வாய்ப்பை பெற்றுக்கொள்ள விரும்பினால், கடந்த தேர்தலில் வைக்கப்பட்ட ஒரு சொற்றொடர் வளமான வாழ்வு, அழகான நாடு நாங்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் அதை அடைய முடியும்.கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற காலி முகத்திடல் சம்பவங்கள் நல்லவர்கள் முடிவெடுத்தால் நல்வர்கள் சேர்ந்தால் நடந்த முறைமை மாற்றத்தை  ஏற்படுத்தியது போல நாங்கள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.ஆனால் இந்த மாற்றம் ஒருநாளில் நடப்பதல்ல.  அண்மையில் நடந்த முறைமை மாற்றம் என்பது ஒரு ஆரம்பம் எனவும் அவர் தெரிவித்தார்.உலகத்தமிழர் பேரவை  சார்பில் வேலுப்பிள்ளை  குகனேந்திரன் உரையாற்றுகையில், நான் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்றதும் உலக தமிழ் பேரவை ஆரம்பிக்கப்பட்டதுடன் நான் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இலங்கையின் பிரச்சினைகளை முன்வைத்தேன்.இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஜெனிவாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம்.இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை பிரித்து வைத்து அரசியல்வாதிகள் அரசியல் வியாபாரத்தை செய்கின்றனர்.அதேவேளை நாங்கள் எதிரிகளாக கருதுவது பௌத்த மதகுருமாரை. கடந்த காலத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதியாலேயே பண்டா- செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கொண்டு வந்தார்.அதேபோன்று டட்லி -செல்வா ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. அதையும் மதகுருமார்களே கிழித்து எறிந்தார்கள்.ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்தலாம் என கூறியவுடன் பௌத்த மதகுருமார்கள் அதனை நிறுத்துவதற்கு முயன்றார்கள்.  அதனால் எங்களுக்கு எதிரிகள் பௌத்த மதகுருமார்கள். அவர்களை பொறுத்தமட்டில் புலம்பெயர் தேசத்திலுள்ள நாங்கள் தான் இந்த நாட்டை பிரிப்பதற்கு முயலுவதாக எண்ணுகின்றார்கள்.அதனால் நாங்கள் இருவரும் எதிரிகள். ஆகையால் அவர்களுடன் கதைப்போம் என  முயன்றோம். எனவே இது தொடர்பில் இலங்கையிலுள்ள நான்கு பௌத்த பீடங்களுடனும் கதைத்து  சமாதானத்தை உண்டாக்குவோம். நாங்கள் எங்கு சந்திப்பது என்பது தான் இன்றுள்ள கேள்வி எனவும் தெரிவித்தார்.அதேவேளை இந் நிகழ்வில் பங்குபற்றிய சர்வமத தலைவர்கள் உரையாற்றுகையில்,  இலங்கையிலுள்ள அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒன்றாக இருந்து பயணிப்போம், அரசியல், இனம், மொழி பாகுபாடு இன்றி சமாதானத்தை நோக்கி விடியலை நோக்கிப்பயணிக்க வேண்டும் என்ற கருத்துக்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த நிகழ்வில், குறித்த பிரகடனம் தொடர்பிலான விளக்கங்களும், கேள்வி பதில்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.அதில் பொதுமக்களின் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன. மேலும் இந்த பிரகடனம் தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் விளக்கமளிக்கப்படவேண்டும் என்றும், ஒரு கட்டமைப்பு உருவாக்கி அதனூடாக இமாலயா பிரகடனத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement