• May 29 2025

சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

Chithra / May 28th 2025, 8:00 am
image



தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

நேற்று முன்தினம் காலை  முதல் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 

நேற்று இரவு பெய்த மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக களனிமுல்ல பகுதியில் பல மரங்கள் முறிந்து விழுந்ததில், அப்பகுதியில் பல மின் கம்பங்கள் சேதமடைந்தன. 

கொழும்பின் ஹுனுபிட்டியவில் உள்ள கங்காராம விகாரைக்கு அருகிலுள்ள மரம் ஒன்று 

இரண்டு கார்கள் மீது விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் இரவு கொழும்பு நகரில் வீசிய பலத்த காற்றினால் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி மத்திய நிலையத்தின் கூரையும் சேதமடைந்தது. 

சிலாபம், வெல்ல கிராமத்தில் பலத்த காற்று வீசியதால் ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன. 

நேற்று  வரை பலத்த காற்று வீசியதால், அப்பகுதி மீனவர்களும் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். 

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால், 

மதுரட்ட, மந்தாரநுவர, பதியபெல்ல போன்ற பகுதிகளில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்துள்ளன. 

இதற்கிடையில், அனுராதபுரத்தில் உள்ள திசா குளத்தின் கரையில்  நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, அப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் விபத்திற்குள்ளானது. 

முச்சக்கர வண்டியின் உரிமையாளர் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​வாகனம் பலத்த காற்றில் அடித்துச் செல்லப்பட்டு குளத்தில் விழுந்ததாகக் கூறினார். 

இலங்கையின் தென்மேற்குப் பகுதி, மேற்கு கடல் பகுதிகள் மற்றும் மத்திய வங்காள விரிகுடாவில் மேகங்கள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை, வரும் நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் நுளம்பங்களின் பரவல் அதிகரித்து வருவதால், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இன்று  வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் மிகவும் கொந்தளிப்பான கடற்பரப்புகளுடன் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில், மிகவும் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இக் கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை  முதல் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக களனிமுல்ல பகுதியில் பல மரங்கள் முறிந்து விழுந்ததில், அப்பகுதியில் பல மின் கம்பங்கள் சேதமடைந்தன. கொழும்பின் ஹுனுபிட்டியவில் உள்ள கங்காராம விகாரைக்கு அருகிலுள்ள மரம் ஒன்று இரண்டு கார்கள் மீது விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கொழும்பு நகரில் வீசிய பலத்த காற்றினால் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி மத்திய நிலையத்தின் கூரையும் சேதமடைந்தது. சிலாபம், வெல்ல கிராமத்தில் பலத்த காற்று வீசியதால் ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று  வரை பலத்த காற்று வீசியதால், அப்பகுதி மீனவர்களும் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால், மதுரட்ட, மந்தாரநுவர, பதியபெல்ல போன்ற பகுதிகளில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்துள்ளன. இதற்கிடையில், அனுராதபுரத்தில் உள்ள திசா குளத்தின் கரையில்  நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, அப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் விபத்திற்குள்ளானது. முச்சக்கர வண்டியின் உரிமையாளர் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​வாகனம் பலத்த காற்றில் அடித்துச் செல்லப்பட்டு குளத்தில் விழுந்ததாகக் கூறினார். இலங்கையின் தென்மேற்குப் பகுதி, மேற்கு கடல் பகுதிகள் மற்றும் மத்திய வங்காள விரிகுடாவில் மேகங்கள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை, வரும் நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் நுளம்பங்களின் பரவல் அதிகரித்து வருவதால், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.இதேவேளை கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று  வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் மிகவும் கொந்தளிப்பான கடற்பரப்புகளுடன் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில், மிகவும் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இக் கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

Advertisement

Advertisement

Advertisement