• Apr 28 2024

யாழில் அரச பேருந்தின் பொறுப்பற்ற செயல்...! நடுத்தெருவில் தவித்த பாடசாலை மாணவர்கள்...!

Sharmi / Nov 8th 2023, 2:12 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் -பருத்தித்துறை வழித்தடத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்து ஒன்று இன்று அதிகாலை தனியார் பேருந்தை முந்திச்செல்லும் நோக்கத்துடன் பஸ் தரிப்பிடத்தில் நின்ற பயணிகளை ஏற்றாது  மிகவும் அதிபயங்கர வேகத்துடன் சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை குறித்த பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் இருந்தபோதும் அதனை கண்டு கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

பாடசாலை மாணவர்கள்,  தனியார் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், நோயாளிகள் எனப் பலரும் குறித்த பேருந்திற்காக காத்திருந்திருந்த நிலையில்  அவர்களை கருத்திற்கொள்ளாது அசுர வேகத்தில் சென்றுள்ளது. 

இவர்களின் பொறுப்பற்ற செயலால் பருவகால சீட்டை பயன்படுத்தும் மாணவர்கள்இ அரச உத்தியோகத்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு பேருந்துகள் பயணிகளை விட்டுச்செல்வதால் தாம்  தனியார் பேருந்திற்கு பணம் செலுத்தியும்இ உரிய நேரத்திற்கு வகுப்பிற்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழில் அரச பேருந்தின் பொறுப்பற்ற செயல். நடுத்தெருவில் தவித்த பாடசாலை மாணவர்கள். யாழ்ப்பாணம் -பருத்தித்துறை வழித்தடத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்து ஒன்று இன்று அதிகாலை தனியார் பேருந்தை முந்திச்செல்லும் நோக்கத்துடன் பஸ் தரிப்பிடத்தில் நின்ற பயணிகளை ஏற்றாது  மிகவும் அதிபயங்கர வேகத்துடன் சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதேவேளை குறித்த பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் இருந்தபோதும் அதனை கண்டு கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பாடசாலை மாணவர்கள்,  தனியார் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், நோயாளிகள் எனப் பலரும் குறித்த பேருந்திற்காக காத்திருந்திருந்த நிலையில்  அவர்களை கருத்திற்கொள்ளாது அசுர வேகத்தில் சென்றுள்ளது. இவர்களின் பொறுப்பற்ற செயலால் பருவகால சீட்டை பயன்படுத்தும் மாணவர்கள்இ அரச உத்தியோகத்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு பேருந்துகள் பயணிகளை விட்டுச்செல்வதால் தாம்  தனியார் பேருந்திற்கு பணம் செலுத்தியும்இ உரிய நேரத்திற்கு வகுப்பிற்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement