யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் நேற்று (07) விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தியின் தடுப்பு (பிரேக்) முதலியன சரியாக இயங்குகிறதா என பரிசோதிப்பதற்காக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம், வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அருகில் நேற்று(27) மாலைபாரவூர்தி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திர சாரதியான சீனியன் இராசன் (65) என்பவர் வீதியோரம் லாண்ட் மாஸ்டரை நிறுத்தி வைத்து விட்டு, வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருந்த போது, பாரவூர்தியொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரைக்கு பாய்ந்து, உழவு இயந்திர சாரதியை மோதித்தள்ளி, அருகிலிருந்த மின்சார கம்பம். தேக்க மரத்தையும் மோதியது.
அதேவேளை குறித்த விபத்தை ஏற்படுத்தியவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
அவர் தனது நெருங்கிய உறவினர் ஒருவரிடமிருந்து 42 இலட்சம் ரூபாவிற்கு பாரவூர்தியை கொள்வனவு செய்திருந்தார்.
நேற்றைய தினமே குறித்த பாரவூர்திக்கான முழுமையான பணத்தையும் செலுத்துவதாக இருந்துள்ளது.
பாரவூர்தியில் இன்று முதலாவது பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நேற்று வாகனத்தின் தடுப்பு(பிரேக்) முதலியன சரியாக இயங்குகிறதா என பரிசோதிப்பதற்காக செலுத்திப் பார்த்துள்ளனர்.
இதன்போதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளோட்டத்துக்கு தயாரான பாரவூர்தியால் யாழில் பறிபோன உழவு இயந்திர சாரதியின் உயிர். யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் நேற்று (07) விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தியின் தடுப்பு (பிரேக்) முதலியன சரியாக இயங்குகிறதா என பரிசோதிப்பதற்காக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம், வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அருகில் நேற்று(27) மாலை பாரவூர்தி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உழவு இயந்திர சாரதியான சீனியன் இராசன் (65) என்பவர் வீதியோரம் லாண்ட் மாஸ்டரை நிறுத்தி வைத்து விட்டு, வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருந்த போது, பாரவூர்தியொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரைக்கு பாய்ந்து, உழவு இயந்திர சாரதியை மோதித்தள்ளி, அருகிலிருந்த மின்சார கம்பம். தேக்க மரத்தையும் மோதியது.அதேவேளை குறித்த விபத்தை ஏற்படுத்தியவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.அவர் தனது நெருங்கிய உறவினர் ஒருவரிடமிருந்து 42 இலட்சம் ரூபாவிற்கு பாரவூர்தியை கொள்வனவு செய்திருந்தார். நேற்றைய தினமே குறித்த பாரவூர்திக்கான முழுமையான பணத்தையும் செலுத்துவதாக இருந்துள்ளது.பாரவூர்தியில் இன்று முதலாவது பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நேற்று வாகனத்தின் தடுப்பு(பிரேக்) முதலியன சரியாக இயங்குகிறதா என பரிசோதிப்பதற்காக செலுத்திப் பார்த்துள்ளனர்.இதன்போதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.