• Jul 23 2025

மஹர பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படாது! நீதி அமைச்சர் அதிரடி

Chithra / Jul 22nd 2025, 4:13 pm
image

 

மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என  நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹர  சிறைச்சாலை வளவில் காணப்பட்ட பள்ளிவாசலுக்கு சட்டவிரோதமான பாதைகள் உடாக வெளியாட்கள்  நுழைந்தனர். 

இதன்போது சிறையில் இருப்பவர்களுக்கு தொலைபேசிகள், போதைப் பொருட்கள் போன்றவை வீசப்பட்டன. 

அதேநேரம் இஸ்லாமிய ஒருவர் இறக்கும் போது பலர் இந்த பள்ளிவாசலுக்கு வந்தனர். 

இதனால் அதிகாரிகள், கைதிகளினதும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதனால் தான் அப்போதைய சிறைச்சாலை அத்தியட்சகரினால் பள்ளிவாசல் மூடப்பட்டது.

இந்த பள்ளிவாசலை மீண்டும் திறந்தாள் அதே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மீண்டும் ஏற்படும். எனவே பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது.  என்றார்.

மஹர பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படாது நீதி அமைச்சர் அதிரடி  மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என  நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.மஹர  சிறைச்சாலை வளவில் காணப்பட்ட பள்ளிவாசலுக்கு சட்டவிரோதமான பாதைகள் உடாக வெளியாட்கள்  நுழைந்தனர். இதன்போது சிறையில் இருப்பவர்களுக்கு தொலைபேசிகள், போதைப் பொருட்கள் போன்றவை வீசப்பட்டன. அதேநேரம் இஸ்லாமிய ஒருவர் இறக்கும் போது பலர் இந்த பள்ளிவாசலுக்கு வந்தனர். இதனால் அதிகாரிகள், கைதிகளினதும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதனால் தான் அப்போதைய சிறைச்சாலை அத்தியட்சகரினால் பள்ளிவாசல் மூடப்பட்டது.இந்த பள்ளிவாசலை மீண்டும் திறந்தாள் அதே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மீண்டும் ஏற்படும். எனவே பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது.  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement