• May 10 2024

90இலட்சம் பெறுமதியான முக்கிய பொருளைக் கைப்பற்றிய கடற்படை!

Sharmi / Jan 23rd 2023, 2:11 pm
image

Advertisement

கேரளா கஞ்சாப் பொதிகளைக் கடத்த முற்பட்ட ஒருவர் இன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.


கேரளா கஞ்சாப் பொதிகளை லொறியில் கடத்திச் செல்வதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருடன் இனைந்து லொறியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோதே கஞ்சாப் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.

லுனுகம்வெஹர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஆணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.

இதன்போது 45 கிலோ கிராம் எடைக் கொண்ட கேரளா கஞ்சாப் போதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன் பெருமதி 90 இலட்சம் ரூபாவென மதிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சிறிய ரக லொறி ஆகியவற்றை நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.

அன்மைக்காலமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கேரளா கஞ்சா, ஐஸ், கடலட்டைகள், பீடி இலைகள், சமையல் மஞ்சள், கடற்குதிரைகள், களைக்கொல்லி நாசினிகள், பாதனிகள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் பலபொருட்கள் கற்பிட்டி பகுதிக்கு கடத்தப்பட்டு வருவதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

90இலட்சம் பெறுமதியான முக்கிய பொருளைக் கைப்பற்றிய கடற்படை கேரளா கஞ்சாப் பொதிகளைக் கடத்த முற்பட்ட ஒருவர் இன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.கேரளா கஞ்சாப் பொதிகளை லொறியில் கடத்திச் செல்வதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருடன் இனைந்து லொறியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோதே கஞ்சாப் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.லுனுகம்வெஹர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஆணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.இதன்போது 45 கிலோ கிராம் எடைக் கொண்ட கேரளா கஞ்சாப் போதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன் பெருமதி 90 இலட்சம் ரூபாவென மதிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சிறிய ரக லொறி ஆகியவற்றை நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.அன்மைக்காலமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கேரளா கஞ்சா, ஐஸ், கடலட்டைகள், பீடி இலைகள், சமையல் மஞ்சள், கடற்குதிரைகள், களைக்கொல்லி நாசினிகள், பாதனிகள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் பலபொருட்கள் கற்பிட்டி பகுதிக்கு கடத்தப்பட்டு வருவதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement