இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க, தமிழ் பேசும் மக்களின் நீண்ட நாள் அபிலாசைகளை கவனத்திலெடுத்து மாகாண சபை தேர்தல்களை காலதாமதமின்றி நடத்த வேண்டும் என தமிழர் சமூக ஐனநாயகக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் செயலாளர் வை. விக்கினேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியினராகிய நாம் 13 வது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்படல், ஆறு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படுதல் என்று தெளிவாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு வாக்களிக்கும் படி வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் அறுதிப் பெரும்பான்மையை பெற வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் செயலாளர் வை.விக்கினேஸ்வரன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் புதிய சகாப்தம் ஒன்றை தோற்றுவிக்க வடக்கு கிழக்கு, மலையகம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மையான வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தோழர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேம்.
புதிய அரசு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் நீண்ட நாள் அபிலாசைகளை கவனத்திலெடுத்து மாகாணசபை தேர்தல்களை காலதாமதமின்றி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் என அவ் ஊடக அறிக்கையை குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் புதிய அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்- தமிழர் சமூக ஜனநாயக கட்சி வேண்டுகோள். இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க, தமிழ் பேசும் மக்களின் நீண்ட நாள் அபிலாசைகளை கவனத்திலெடுத்து மாகாண சபை தேர்தல்களை காலதாமதமின்றி நடத்த வேண்டும் என தமிழர் சமூக ஐனநாயகக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் செயலாளர் வை. விக்கினேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியினராகிய நாம் 13 வது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்படல், ஆறு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படுதல் என்று தெளிவாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு வாக்களிக்கும் படி வேண்டுகோள் விடுத்திருந்தோம்.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் அறுதிப் பெரும்பான்மையை பெற வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் செயலாளர் வை.விக்கினேஸ்வரன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.அதேவேளை, இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் புதிய சகாப்தம் ஒன்றை தோற்றுவிக்க வடக்கு கிழக்கு, மலையகம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மையான வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தோழர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேம்.புதிய அரசு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் நீண்ட நாள் அபிலாசைகளை கவனத்திலெடுத்து மாகாணசபை தேர்தல்களை காலதாமதமின்றி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் என அவ் ஊடக அறிக்கையை குறிப்பிடப்பட்டுள்ளது.