• May 09 2024

நாட்டில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டம்..! திடீரென இளமையாக மாறும் மக்கள்...!samugammedia

Sharmi / Jun 29th 2023, 11:42 am
image

Advertisement

தென்கொரியாவில் பிறந்த நாள் அடிப்படையில் வயதைக் கணக்கிடும் சர்வதேச முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் அந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களிற்கும்  ஒன்று அல்லது இரண்டு வயது குறைவடையவுள்ளது.

இந்த சட்டமானது, அந்த நாட்டில் தற்பொழுது வழக்கத்தில் உள்ள 2 பாரம்பரிய வயது கணக்கிடும் நடைமுறைகளையும் கைவிட்டு, சர்வதேச நடைமுறையை ஏற்பதற்கு வழி சமைத்துள்ளது.

அங்கு, தற்போதுள்ள பாரம்பரிய வயது கணக்கீட்டு முறைகளில் ஒன்றின்படி, ஒவ்வொருவருக்கும் பிறக்கும் போதே ஒரு வயது என்று கணக்கிடப்படுகின்றது.

அதாவது, தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் பொழுதே  இந்த வயதின் கணக்கீடு ஆரம்பிக்கின்றது.

மற்றைய முறையின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலாம் திகதி அனைவருக்கும் ஒரு வயது கூடி விடுகின்றது. ஆயினும், இந்த வயது கணக்கீட்டு முறை ஒருவரின் பிறந்த நாளை கணக்கில் கொள்ளாது, ஜனவரி முதலாம் திகதி ஆகுமானால் அனைவருக்கும் ஒரு வயதை கூட்டிவிடுகின்றது.

அதன் மூலமாக ஜனவரியில் பிறந்தவருக்கும், டிசம்பர் மாதம் பிறந்தவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு வயதைக் கூட்டி விடுகின்றது.

ஆகவே இவ்வாறான முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கிலும், சர்வதேச அளவில் பயன்படுத்தும் போது உண்டாகும் குழப்பங்களையும் தவிர்க்கும் வகையிலும்  புதிய சட்டத்தை அந்நாடு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், பிறந்த நாள் அடிப்படையில் வயதைக் கணக்கிடும் சர்வதேச நடைமுறை தென்கொரியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.


நாட்டில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டம். திடீரென இளமையாக மாறும் மக்கள்.samugammedia தென்கொரியாவில் பிறந்த நாள் அடிப்படையில் வயதைக் கணக்கிடும் சர்வதேச முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் அந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களிற்கும்  ஒன்று அல்லது இரண்டு வயது குறைவடையவுள்ளது. இந்த சட்டமானது, அந்த நாட்டில் தற்பொழுது வழக்கத்தில் உள்ள 2 பாரம்பரிய வயது கணக்கிடும் நடைமுறைகளையும் கைவிட்டு, சர்வதேச நடைமுறையை ஏற்பதற்கு வழி சமைத்துள்ளது. அங்கு, தற்போதுள்ள பாரம்பரிய வயது கணக்கீட்டு முறைகளில் ஒன்றின்படி, ஒவ்வொருவருக்கும் பிறக்கும் போதே ஒரு வயது என்று கணக்கிடப்படுகின்றது. அதாவது, தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் பொழுதே  இந்த வயதின் கணக்கீடு ஆரம்பிக்கின்றது. மற்றைய முறையின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலாம் திகதி அனைவருக்கும் ஒரு வயது கூடி விடுகின்றது. ஆயினும், இந்த வயது கணக்கீட்டு முறை ஒருவரின் பிறந்த நாளை கணக்கில் கொள்ளாது, ஜனவரி முதலாம் திகதி ஆகுமானால் அனைவருக்கும் ஒரு வயதை கூட்டிவிடுகின்றது. அதன் மூலமாக ஜனவரியில் பிறந்தவருக்கும், டிசம்பர் மாதம் பிறந்தவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு வயதைக் கூட்டி விடுகின்றது.ஆகவே இவ்வாறான முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கிலும், சர்வதேச அளவில் பயன்படுத்தும் போது உண்டாகும் குழப்பங்களையும் தவிர்க்கும் வகையிலும்  புதிய சட்டத்தை அந்நாடு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், பிறந்த நாள் அடிப்படையில் வயதைக் கணக்கிடும் சர்வதேச நடைமுறை தென்கொரியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement