• Nov 23 2024

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு! வெள்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!

Chithra / Oct 14th 2024, 8:54 am
image

 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனர்த்தம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

240 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 1753 குடும்பங்களைச் சேர்ந்த 6963 பேர் தற்போது 81 பாதுகாப்பு இடங்களில் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

இதேவேளை நிலவும் மழையுடனான கால நிலையைத் தொடர்ந்து ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, களுகங்கையின் நீர்மட்டமானது மகுர பகுதியில் அதிகரித்து வருவதுடன், ஜின் கங்கையின் நீர்மட்டமானது பத்தேகம பகுதியிலும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், களனி கங்கையின் நலகம பகுதியிலும் அத்தனகலு ஓயாவின் துனமலே பகுதியிலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை,  8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை மற்றும் பாதுக்க பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின், எஹலியகொட, கிரியெல்ல, கலவானை, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, கேகாலை, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, வலல்லாவிட்ட, தொடங்கொட, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும்  நாளையும்   மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று மற்றும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்றும், நாளையதினமும் மூடப்படவுள்ளது.


சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு வெள்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்  நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அதன்படி சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி, 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த அனர்த்தம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.240 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் 1753 குடும்பங்களைச் சேர்ந்த 6963 பேர் தற்போது 81 பாதுகாப்பு இடங்களில் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை நிலவும் மழையுடனான கால நிலையைத் தொடர்ந்து ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, களுகங்கையின் நீர்மட்டமானது மகுர பகுதியில் அதிகரித்து வருவதுடன், ஜின் கங்கையின் நீர்மட்டமானது பத்தேகம பகுதியிலும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், களனி கங்கையின் நலகம பகுதியிலும் அத்தனகலு ஓயாவின் துனமலே பகுதியிலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,  8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை மற்றும் பாதுக்க பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின், எஹலியகொட, கிரியெல்ல, கலவானை, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, கேகாலை, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, வலல்லாவிட்ட, தொடங்கொட, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும்  நாளையும்   மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று மற்றும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்றும், நாளையதினமும் மூடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement