• Oct 30 2024

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மிரட்டல் விடுக்கின்றது! – உறவுகள் கவலை samugammedia

Chithra / Apr 23rd 2023, 9:38 am
image

Advertisement

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் தற்போது மிரட்டல் விடுக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று தடவைகள் அறிவித்தும் அலுவலகத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை நான்காவது தடைவை அறிவித்து வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் நட்ட ஈடுட்டினை பெற்றுக்கொள்ளுமாறும் அதற்காக பிள்ளைகளையும் வங்கி கணக்கு இலக்கமும் கொண்டுவரவேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.

ஒ.எம்.பி அலுவலகத்தினால் நிறை இலாபம் இருக்கின்ற படியால்தான் தொடர்ச்சியாக எங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் எதிர்வரும் 18 ஆம் திகதி இனம்படுகொலை செய்த நாட்கள் நெருங்கிவரும் நேரத்தில் இவ்வாறான மிரட்டல்கள் வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மிரட்டல் விடுக்கின்றது – உறவுகள் கவலை samugammedia காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் தற்போது மிரட்டல் விடுக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.மூன்று தடவைகள் அறிவித்தும் அலுவலகத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை நான்காவது தடைவை அறிவித்து வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.மேலும் நட்ட ஈடுட்டினை பெற்றுக்கொள்ளுமாறும் அதற்காக பிள்ளைகளையும் வங்கி கணக்கு இலக்கமும் கொண்டுவரவேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.ஒ.எம்.பி அலுவலகத்தினால் நிறை இலாபம் இருக்கின்ற படியால்தான் தொடர்ச்சியாக எங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் எதிர்வரும் 18 ஆம் திகதி இனம்படுகொலை செய்த நாட்கள் நெருங்கிவரும் நேரத்தில் இவ்வாறான மிரட்டல்கள் வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement