• Nov 23 2024

யாழில் அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாளர் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்பு...! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!

Sharmi / Jul 1st 2024, 10:34 am
image

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இரவு எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகி்ச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றையதினம் இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்த  நபர், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளரான 43 வயதுடைய சரவணபவானந்தன் சிவகுமார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தீக்காயத்திற்க்கு உள்ளானது தொடர்பான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாளர் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்பு. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இரவு எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகி்ச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றையதினம் இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு உயிரிழந்த  நபர், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளரான 43 வயதுடைய சரவணபவானந்தன் சிவகுமார் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர் தீக்காயத்திற்க்கு உள்ளானது தொடர்பான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement