• Sep 20 2024

மீளவும் ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு மக்கள் ஆணை வழங்கவே கூடாது! - அநுர வேண்டுகோள்

Chithra / Sep 3rd 2024, 8:24 am
image

Advertisement


ராஜபக்சவினர் குடும்ப ஆட்சியையே முன்னெடுத்தனர். அந்த குடும்ப ஆட்சி மீண்டும் வர மக்கள் ஆணை வழங்கக்கூடாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரிக்கிலகஸ்கட பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தார். தற்போது அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

79 வயதான மஹிந்த ராஜபக்ஷ தமது மகனுக்காக மேடையேறுகின்றார். கடும் கஷ்டத்துடன் அவர் மேடைகளில் ஏறுகின்றார். நடக்கக் கஷ்டப்படுகின்றார்.

இவ்வளவு கஷ்டப்பட்டு மேடைகளில் ஏறுவதற்கான காரணம் பொதுமக்களின் நலன் கருதியா? இல்லை. 

தமது பிள்ளையின் வெற்றிக்காகவே. எனவே, ராஜபக்ஷ குடும்ப ஆட்சி மீண்டும் வர மக்கள் ஆணை வழங்கக்கூடாது." - என்றார்.

மீளவும் ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு மக்கள் ஆணை வழங்கவே கூடாது - அநுர வேண்டுகோள் ராஜபக்சவினர் குடும்ப ஆட்சியையே முன்னெடுத்தனர். அந்த குடும்ப ஆட்சி மீண்டும் வர மக்கள் ஆணை வழங்கக்கூடாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ரிக்கிலகஸ்கட பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தார். தற்போது அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.79 வயதான மஹிந்த ராஜபக்ஷ தமது மகனுக்காக மேடையேறுகின்றார். கடும் கஷ்டத்துடன் அவர் மேடைகளில் ஏறுகின்றார். நடக்கக் கஷ்டப்படுகின்றார்.இவ்வளவு கஷ்டப்பட்டு மேடைகளில் ஏறுவதற்கான காரணம் பொதுமக்களின் நலன் கருதியா இல்லை. தமது பிள்ளையின் வெற்றிக்காகவே. எனவே, ராஜபக்ஷ குடும்ப ஆட்சி மீண்டும் வர மக்கள் ஆணை வழங்கக்கூடாது." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement