தமிழகத்தில் தூங்கி கொண்டிருந்த மாமியாரை, மருமகள் கம்பால் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி, என்பவருக்கு மகாலட்சுமி(27) என்ற மனைவி இருக்கிறார்.
இதற்கமைய ராமசாமியின் தாயான சீதாராம லட்சுமி(58) என்பவர், நேற்று அதிகாலை அவரது வீட்டில் ரத்த காயங்களோடு உயிரிழந்து கிடந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார், அவர்களது வீட்டிற்கு வெளியே இருந்த சிசிடிவியை பரிசோதித்துள்ளனர். அதில் ராமசாமியின் மனைவி மகாலட்சுமி, ஆண் வேடமிட்டு கையில் கம்போடு வெளியே வருவது தெரிந்துள்ளது.
பின்னர் சந்தேகத்தின் பேரில் மகாலட்சுமியை பொலிஸார் விசாரித்துள்ளனர். விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.
மேலும் பொலிஸார் நடத்திய விசாரணையில், மகாலட்சுமிக்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்திருக்கிறது.
இதனால் மகாலட்சுமியின் கணவர் தனது தாயை அருகிலிருந்த இன்னொரு வீட்டில் தங்க வைத்துள்ளார். இருந்தும் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நள்ளிரவில் திருடனை போல் ஆண் வேடமிட்டு வந்த மகாலட்சுமி, தூங்கி கொண்டிருந்த மாமியாரை கம்பால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி அவரது தங்க சங்கிலியை திருடியுள்ளார். ஆண் வேடமிட்டு வந்து தங்க சங்கிலியை திருடினால், திருடன் கொலை செய்திருக்கலாம் என பொலிஸாரை நம்ப வைத்து விடலாம் என நினைத்திருக்கிறார்.
இது தொடர்பில் மகாலட்சுமியை கைது செய்த பொலிஸார், அவரை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
தூங்கி கொண்டிருந்த மாமியாருக்கு நேர்ந்த துன்பம் - மருமகள் செய்த கொடூர செயல் - விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் samugammedia தமிழகத்தில் தூங்கி கொண்டிருந்த மாமியாரை, மருமகள் கம்பால் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நெல்லை மாவட்டம் வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி, என்பவருக்கு மகாலட்சுமி(27) என்ற மனைவி இருக்கிறார்.இதற்கமைய ராமசாமியின் தாயான சீதாராம லட்சுமி(58) என்பவர், நேற்று அதிகாலை அவரது வீட்டில் ரத்த காயங்களோடு உயிரிழந்து கிடந்திருக்கிறார்.இதனை தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார், அவர்களது வீட்டிற்கு வெளியே இருந்த சிசிடிவியை பரிசோதித்துள்ளனர். அதில் ராமசாமியின் மனைவி மகாலட்சுமி, ஆண் வேடமிட்டு கையில் கம்போடு வெளியே வருவது தெரிந்துள்ளது.பின்னர் சந்தேகத்தின் பேரில் மகாலட்சுமியை பொலிஸார் விசாரித்துள்ளனர். விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.மேலும் பொலிஸார் நடத்திய விசாரணையில், மகாலட்சுமிக்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்திருக்கிறது.இதனால் மகாலட்சுமியின் கணவர் தனது தாயை அருகிலிருந்த இன்னொரு வீட்டில் தங்க வைத்துள்ளார். இருந்தும் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.இதனிடையே நள்ளிரவில் திருடனை போல் ஆண் வேடமிட்டு வந்த மகாலட்சுமி, தூங்கி கொண்டிருந்த மாமியாரை கம்பால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார்.பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி அவரது தங்க சங்கிலியை திருடியுள்ளார். ஆண் வேடமிட்டு வந்து தங்க சங்கிலியை திருடினால், திருடன் கொலை செய்திருக்கலாம் என பொலிஸாரை நம்ப வைத்து விடலாம் என நினைத்திருக்கிறார்.இது தொடர்பில் மகாலட்சுமியை கைது செய்த பொலிஸார், அவரை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.