• May 18 2024

அரச சொத்துக்களை விற்பனை செய்து நாட்டை ஏமாற்றும் ஜனாதிபதி! அநுரகுமார குற்றச்சாட்டு samugammedia

Chithra / Jul 26th 2023, 2:25 pm
image

Advertisement

அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஒழிந்து கொண்டிருக்கிறார் என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற காலத்திலிருந்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் மக்கள் மத்தியில் பொதுக்கூட்டமொன்றைக்கூட நடத்தி நாம் காணவில்லை.

மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வராத அவர், அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிந்து கொண்டிருக்கிறார்.

இன்று வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், ஜனாதிபதியோ நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதாக குறிப்பிடுகிறார்.

மத்திய வங்கியின் அறிக்கையொன்று அண்மையில் வெளியானது. இதில், 68 வீதமான மக்கள் இரண்டு வேளை உணவினை மட்டுமே உற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, கடனை திருப்பிச் செலுத்தியும் எரிபொருள், எரிவாயு இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இவ்வாண்டு 600 கோடி டொலர் கடனை திருப்பிச் செலுத்தப் போவதில்லை என்று கூறப்படுகிறது.

அரச சொத்துக்களை விற்பனை செய்து, அதன் ஊடாக கிடைக்கும் டொலரைக் காண்பித்து, இந்த நாடு முன்னேறி விட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அரச சொத்துக்களை விற்பனை செய்து நாட்டை ஏமாற்றும் ஜனாதிபதி அநுரகுமார குற்றச்சாட்டு samugammedia அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஒழிந்து கொண்டிருக்கிறார் என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற காலத்திலிருந்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் மக்கள் மத்தியில் பொதுக்கூட்டமொன்றைக்கூட நடத்தி நாம் காணவில்லை.மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வராத அவர், அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிந்து கொண்டிருக்கிறார்.இன்று வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், ஜனாதிபதியோ நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதாக குறிப்பிடுகிறார்.மத்திய வங்கியின் அறிக்கையொன்று அண்மையில் வெளியானது. இதில், 68 வீதமான மக்கள் இரண்டு வேளை உணவினை மட்டுமே உற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு, கடனை திருப்பிச் செலுத்தியும் எரிபொருள், எரிவாயு இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இவ்வாண்டு 600 கோடி டொலர் கடனை திருப்பிச் செலுத்தப் போவதில்லை என்று கூறப்படுகிறது.அரச சொத்துக்களை விற்பனை செய்து, அதன் ஊடாக கிடைக்கும் டொலரைக் காண்பித்து, இந்த நாடு முன்னேறி விட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement