• May 19 2024

நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதியே! சுமந்திரன் SamugamMedia

Chithra / Feb 28th 2023, 3:02 pm
image

Advertisement

பாதைகள், வீதிகள், பாலங்கள் போன்றவை இந்த நாட்டில் அத்தியாவசிய சேவையா என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்

திருகோணமலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் 

நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பாதைகள், வீதிகள், பாலங்கள் அடங்கலாக மதகுகளுக்கும் அத்தியாவசிய சேவையாக பிரகடுனப்படுத்தப்பட்டுள்ளது.

இனி வாரும் காலங்களில் பொதுமக்கள் ஒன்று சேரும் செயற்பாடுகளை தடுப்பதற்காகவே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளில் ஜனாதிபதி இடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி, நிதி அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த விடாது நிதியை தேவையான அளவு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கொடுக்காது முடக்கி வைத்திருப்பதும் ஜனாதிபதியே.

மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் அரசாங்கம் பொலிஸாரை ஏவி விட்டு இத் தாக்குதலை நடாத்தி அதன் மூலமாக ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டால் நிலமை இன்னும் மோசமடையும்.

அப்படி மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரித்தும் கிடையாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதியே சுமந்திரன் SamugamMedia பாதைகள், வீதிகள், பாலங்கள் போன்றவை இந்த நாட்டில் அத்தியாவசிய சேவையா என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்திருகோணமலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பாதைகள், வீதிகள், பாலங்கள் அடங்கலாக மதகுகளுக்கும் அத்தியாவசிய சேவையாக பிரகடுனப்படுத்தப்பட்டுள்ளது.இனி வாரும் காலங்களில் பொதுமக்கள் ஒன்று சேரும் செயற்பாடுகளை தடுப்பதற்காகவே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளில் ஜனாதிபதி இடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி, நிதி அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த விடாது நிதியை தேவையான அளவு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கொடுக்காது முடக்கி வைத்திருப்பதும் ஜனாதிபதியே.மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் அரசாங்கம் பொலிஸாரை ஏவி விட்டு இத் தாக்குதலை நடாத்தி அதன் மூலமாக ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டால் நிலமை இன்னும் மோசமடையும்.அப்படி மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரித்தும் கிடையாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement