• Sep 17 2024

நாட்டில் நடைபெறுவது ஜனநாயகமா? அல்லது அராஜக அரசியலா? இராதாகிருஸ்ணன் கேள்வி! SamugamMedia

Tamil nila / Feb 28th 2023, 3:09 pm
image

Advertisement

போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்தவரின் உயிருக்கு ஜனாதிபதியும் இந்த அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்சி ஆதரவாளர்களை வைத்து தாக்கியிருந்ததாகவும் ஆனால் இன்று காவல் துறையை வைத்து தாக்குகியுள்ளதாக இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.


இதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகமா என்றும் இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இன்று இந்த நாட்டில் நடைபெறுவது ஜனநாயகமா? அல்லது அராஜக அரசியலா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. 


இந்த நிலைமை தொடருமானால் சர்வதேச ரீதியில் எமக்கு உதவி செய்ய காத்திருக்கின்ற நாடுகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அந்த உதவிகளை செய்வதில் பின்வாங்கலாம். 


எனவே அரசாங்கம் ஜனநாயக போராட்டங்களை காவல்துறையினரை கொண்டு அடக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.


ஜனாதிபதி இன்று பொறுப்பற்ற விதத்தில் நாடாளுமன்றத்தில்    உரையாற்றுகின்றார். தேர்தலை ஒரு விளையாட்டாக கருதுகின்றார். அது மக்களின் ஜனநாயக உரிமை என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும்.


அன்று கட்சி ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களை தாக்கியதால் கோட்டாபாய ராஜபக்ச தனது பதவியைவிட்டு ஒடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. 


அதேபோன்று இந்த அரசாங்கமும் செயற்படுவதற்கு முற்பட்டால் ஜனாதிபதி ரணிலுக்கும் அதே நிலைமை ஏற்படும் என்றும் இராதாகிருஸ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் நடைபெறுவது ஜனநாயகமா அல்லது அராஜக அரசியலா இராதாகிருஸ்ணன் கேள்வி SamugamMedia போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்தவரின் உயிருக்கு ஜனாதிபதியும் இந்த அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்சி ஆதரவாளர்களை வைத்து தாக்கியிருந்ததாகவும் ஆனால் இன்று காவல் துறையை வைத்து தாக்குகியுள்ளதாக இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.இதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகமா என்றும் இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று இந்த நாட்டில் நடைபெறுவது ஜனநாயகமா அல்லது அராஜக அரசியலா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த நிலைமை தொடருமானால் சர்வதேச ரீதியில் எமக்கு உதவி செய்ய காத்திருக்கின்ற நாடுகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அந்த உதவிகளை செய்வதில் பின்வாங்கலாம். எனவே அரசாங்கம் ஜனநாயக போராட்டங்களை காவல்துறையினரை கொண்டு அடக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.ஜனாதிபதி இன்று பொறுப்பற்ற விதத்தில் நாடாளுமன்றத்தில்    உரையாற்றுகின்றார். தேர்தலை ஒரு விளையாட்டாக கருதுகின்றார். அது மக்களின் ஜனநாயக உரிமை என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும்.அன்று கட்சி ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களை தாக்கியதால் கோட்டாபாய ராஜபக்ச தனது பதவியைவிட்டு ஒடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதேபோன்று இந்த அரசாங்கமும் செயற்படுவதற்கு முற்பட்டால் ஜனாதிபதி ரணிலுக்கும் அதே நிலைமை ஏற்படும் என்றும் இராதாகிருஸ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement