• May 03 2024

சூடுபிடிக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல்..! களத்தில் இறங்கவுள்ள முக்கிய புள்ளி..!samugammedia

Sharmi / Jul 18th 2023, 11:26 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்தல் களத்தில் இறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாச   ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்த கட்சிகளும் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்களை வெளியிடவில்லை.

இவ்வாறானதொரு நிலை ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை முன்னிருத்த பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சுதந்திர ஜனதா சபை தனக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு தயார் என பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஊழலற்றவர், அவர் நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை வகிக்க மிகவும் பொருத்தமானவர் எனவும், எனவே அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.


சூடுபிடிக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல். களத்தில் இறங்கவுள்ள முக்கிய புள்ளி.samugammedia எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்தல் களத்தில் இறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாச   ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.எனினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்த கட்சிகளும் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்களை வெளியிடவில்லை.இவ்வாறானதொரு நிலை ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை முன்னிருத்த பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, சுதந்திர ஜனதா சபை தனக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு தயார் என பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஊழலற்றவர், அவர் நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை வகிக்க மிகவும் பொருத்தமானவர் எனவும், எனவே அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement