• Jan 11 2025

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு தடையாகவுள்ள பயங்கரவாதத் தடை சட்டம்; முற்றாக நீக்குங்கள்! செல்வம் எம்.பி. கோரிக்கை

Chithra / Jan 7th 2025, 3:09 pm
image


புலம்பெயர் மக்கள் இங்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாத தடை சட்டம் தடையாக உள்ளது எனவும் இச் சட்டத்தை முற்றாக நீக்குமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

தொல்லியல் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களத்தால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்திய முகாம்களில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கடவுச்சீட்டை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு வரவழைக்க நடவடிக்கை எடுங்கள்.

அத்தோடு அனர்த்தங்களின் போது அரச ஊழியர்களின் குடும்பங்களையும் கவனத்தில் எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.


புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு தடையாகவுள்ள பயங்கரவாதத் தடை சட்டம்; முற்றாக நீக்குங்கள் செல்வம் எம்.பி. கோரிக்கை புலம்பெயர் மக்கள் இங்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாத தடை சட்டம் தடையாக உள்ளது எனவும் இச் சட்டத்தை முற்றாக நீக்குமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,முப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.தொல்லியல் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களத்தால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இந்திய முகாம்களில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கடவுச்சீட்டை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு வரவழைக்க நடவடிக்கை எடுங்கள்.அத்தோடு அனர்த்தங்களின் போது அரச ஊழியர்களின் குடும்பங்களையும் கவனத்தில் எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement