இலங்கை அணிக்கு ஏற்பட்ட சிக்கல்; ஐந்து வீரர்களுக்கு நடந்தது என்ன? சவாலுக்கு தயாராகும் அணி..!

282

அணியில் முக்கியமான ஐந்து வீரர்கள் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில், இளம் வீரர்களை கொண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.

மேலும் சென்சுரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, சுரங்க லக்மால், கசுன் ராஜித, லஹிரு குமார, தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் உபாதைக்குள்ளாகினர். இதனால் இவர்கள் அனைவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவறவிடுகின்றனர்.

மேலும் இந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சுரங்க லக்மாலுக்கு பதிலாக துஸ்மந்த சமீர அணியில் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவிற்கு பதிலாக, அசித்த பெனார்டோ டெஸ்ட் அறிமுகத்தை பெறலாம்.

மேலும், தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக லஹிரு திரிமன்னேயும், தனஞ்சய டி சில்வாவிற்கு பதிலாக மினோத் பானுக டெஸ்ட் அறிமுகத்தையும் பெறலாம்.

எனினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அதிகாரப்பூர்வமான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்படவில்லை.

அத்தோடு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Recent Articles

ஷிவானி பற்றி பேச்சு வந்ததால் ஏற்பட்ட விபரீதம்; பரபரப்பை ஏற்படுத்தும் புதிய வீடியோ..என்ன நடந்தது தெரியுமா?

கமலின் நாயகிக்கு குழந்தை பிறந்து விட்டது; அனைவரும் ஷாக்

பிளான் பண்ணி ‘PROPOSE’ செய்த ‘காதலன்’!!… ‘ஓகே’ சொன்ன ‘காதலி’… மறுகணமே காத்திருந்த ‘அதிர்ச்சி’!!…

இலங்கை ஒரு இனவாத நாடே-கடும் சினத்தில் கஜேந்திரகுமார்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 12 பேர் உயிரிழப்பு; கொரோனாவால் இல்லை!

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

கொரோனா அச்சம்- 40 குழந்தைகளை பிரசவித்த தாய்மார்!

விஜய்சேதுபதியின் அட்டகாசமான நடிப்பில் தயாராகும் பாலிவுட் படத்தின் டைட்டில்!

திருகோணமலையில் அதிகரிக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள்!

கடலிலும் கொரோனா தொற்று ஏற்படும் சாத்தியம்

புதுவருட ஆண்டில் தமிழ் சினிமாவில் முதல் உயிரிழப்பு-பெரும் துயரத்தில் திரையுலகம்!