• May 19 2024

ரணில் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்..! இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை samugammedia

Chithra / May 18th 2023, 9:02 am
image

Advertisement

நாட்டில் பொருளாதார சூழ்நிலையினால் மிக மோசமான சூழ்நிலையினை பொறுப்பேற்று இந்த நாட்டினை கட்டம் கட்டமாக வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசென்ற ஜனாதிபதி அதற்கு சமாந்தரமாக வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதற்கான ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநருக்கும் இதன்போது வாழ்த்துகளை தெரிவித்த அவர், அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்ததன் காரணமாக கிழக்கில் சிறந்த சேவையினை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வறிய நிலையில் உள்ள பிரதேச செயலகப்பிரிவான வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வறிய மக்களுக்கான அரசி பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

வவுணதீவு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சபேஸன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.

மியன்மார் அரசாங்கத்தினால் பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட அரசி இவ்வாறு மக்களுக்கு வழங்கப்பட்டது.

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 600 குடும்பங்களுக்கு இந்த அரசி வழங்கப்படவுள்ளதுடன் முதல்கட்டமாக 285 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.


ரணில் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை samugammedia நாட்டில் பொருளாதார சூழ்நிலையினால் மிக மோசமான சூழ்நிலையினை பொறுப்பேற்று இந்த நாட்டினை கட்டம் கட்டமாக வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசென்ற ஜனாதிபதி அதற்கு சமாந்தரமாக வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதற்கான ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநருக்கும் இதன்போது வாழ்த்துகளை தெரிவித்த அவர், அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்ததன் காரணமாக கிழக்கில் சிறந்த சேவையினை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் வறிய நிலையில் உள்ள பிரதேச செயலகப்பிரிவான வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வறிய மக்களுக்கான அரசி பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.வவுணதீவு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சபேஸன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.மியன்மார் அரசாங்கத்தினால் பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட அரசி இவ்வாறு மக்களுக்கு வழங்கப்பட்டது.வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 600 குடும்பங்களுக்கு இந்த அரசி வழங்கப்படவுள்ளதுடன் முதல்கட்டமாக 285 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement