• May 19 2024

தமிழர் தாயகமெங்கும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்! samugammedia

Chithra / May 18th 2023, 9:10 am
image

Advertisement

தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகத் திட்டமிட்டு  படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

பிரதான நினைவேந்தல் இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் நடைபெறுகின்றது.

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் இன்று முற்பகல் 10.29 மணிக்கு மணி ஒலியுடன் ஆரம்பமாகின்றது என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

முற்பகல் 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 10.31 மணிக்குப் பொதுச் சுடர் ஏற்றப்படும். மு.ப. 10.32 மணிக்கு மக்கள் சுடரேற்றல் நடைபெறும். முற்பகல் 10.35 மணிக்கு மதகுருமார் மலரலஞ்சலி செலுத்துவர்.

தொடர்ந்து முற்பகல் 10.40 மணிக்கு முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிடப்படும். அதன்பின்னர் முற்பகல் 10.50 மணிக்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்துவர்.

அதேவேளை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் அனைவரும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அணிதிரள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகமெங்கும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் samugammedia தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகத் திட்டமிட்டு  படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.பிரதான நினைவேந்தல் இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் நடைபெறுகின்றது.முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் இன்று முற்பகல் 10.29 மணிக்கு மணி ஒலியுடன் ஆரம்பமாகின்றது என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.முற்பகல் 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 10.31 மணிக்குப் பொதுச் சுடர் ஏற்றப்படும். மு.ப. 10.32 மணிக்கு மக்கள் சுடரேற்றல் நடைபெறும். முற்பகல் 10.35 மணிக்கு மதகுருமார் மலரலஞ்சலி செலுத்துவர்.தொடர்ந்து முற்பகல் 10.40 மணிக்கு முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிடப்படும். அதன்பின்னர் முற்பகல் 10.50 மணிக்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்துவர்.அதேவேளை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் அனைவரும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அணிதிரள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement