• Nov 26 2024

அரச இல்லங்களில் வாழும் ராஜபக்சக்கள்..! வெட்கமில்லையா? கடுமையாக சாடிய அனுர!

Chithra / Jan 13th 2024, 9:27 am
image


ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 இலட்சம் ரூபாவினை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ முடியும். நாமல் ராஜபக்ச அரச இல்லத்தில் வாழ்கிறார். 

அவரது தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமும் அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.

வெட்கமில்லையா? நாமலுக்கு எவ்வாறு அரச இல்லம் வழங்க முடியும். 

முடிந்தால் நாடாளுமன்றத்தில் குறிப்பிடுங்கள்.

கப்பலில் களியாட்டம் நடத்தியமை தற்போது பேசுபொருளாக உள்ளது. பகலில் 20 மீற்றர் தூரம் கூட தெரியாதவர்கள் துறைமுகத்தை பார்வையிட சென்றார்களாம். அதுவும் இரவில், யாரை ஏமாற்றுகின்றீர்கள்.

நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் வகையில் வரியை அதிகரித்து விட்டு அரச நிதியை மோசடி செய்கின்றீர்கள். என்றும் தெரிவித்துள்ளார்.

அரச இல்லங்களில் வாழும் ராஜபக்சக்கள். வெட்கமில்லையா கடுமையாக சாடிய அனுர ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 இலட்சம் ரூபாவினை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகின்றது.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ முடியும். நாமல் ராஜபக்ச அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரது தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமும் அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.வெட்கமில்லையா நாமலுக்கு எவ்வாறு அரச இல்லம் வழங்க முடியும். முடிந்தால் நாடாளுமன்றத்தில் குறிப்பிடுங்கள்.கப்பலில் களியாட்டம் நடத்தியமை தற்போது பேசுபொருளாக உள்ளது. பகலில் 20 மீற்றர் தூரம் கூட தெரியாதவர்கள் துறைமுகத்தை பார்வையிட சென்றார்களாம். அதுவும் இரவில், யாரை ஏமாற்றுகின்றீர்கள்.நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் வகையில் வரியை அதிகரித்து விட்டு அரச நிதியை மோசடி செய்கின்றீர்கள். என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement