• May 19 2024

மத போதகரின் பேச்சால் வந்த வினை! கென்யாவில் பலி எண்ணிக்கை 201 ஆக உயர்வு..! - 600க்கும் மேற்பட்டோர் மாயம் samugammedia

Chithra / May 14th 2023, 9:43 am
image

Advertisement

கென்யாவில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு செய்ய வருபவர்களிடம் பட்டினியால் உயிரிழந்தால் இயேசு கிறிஸ்துவிடம் செல்லலாம் என மத போதகர் பால் மெக்கன்சி என்தெங்கேயின் கூறியுள்ளதை நம்பி அவருடைய சீடர்கள் மலிந்தி என்ற பகுதிக்கு அருகே உள்ள ஷகஹோலா காட்டில் உண்ணாவிரதம் இருந்து இயேசு கிறிஸ்துவை வழிபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ம் திகதி பட்டினியாக கிடந்ததால் பலர் உயிரிழந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் அந்த பகுதியை முழுவதும் சீல் வைத்தனர். 

அங்கு புதைக்கப்பட்ட 47 பேரின் சடலங்களை காவல்துறையினர் தோண்டி எடுத்திருந்த நிலையில், இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படி தொடர்ச்சியான தேடுதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அப்பகுதியில் இருந்து மொத்தம் 201 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் காணாமல் போயுள்ளதால், தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.


மத போதகரின் பேச்சால் வந்த வினை கென்யாவில் பலி எண்ணிக்கை 201 ஆக உயர்வு. - 600க்கும் மேற்பட்டோர் மாயம் samugammedia கென்யாவில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு செய்ய வருபவர்களிடம் பட்டினியால் உயிரிழந்தால் இயேசு கிறிஸ்துவிடம் செல்லலாம் என மத போதகர் பால் மெக்கன்சி என்தெங்கேயின் கூறியுள்ளதை நம்பி அவருடைய சீடர்கள் மலிந்தி என்ற பகுதிக்கு அருகே உள்ள ஷகஹோலா காட்டில் உண்ணாவிரதம் இருந்து இயேசு கிறிஸ்துவை வழிபட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ம் திகதி பட்டினியாக கிடந்ததால் பலர் உயிரிழந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் அந்த பகுதியை முழுவதும் சீல் வைத்தனர். அங்கு புதைக்கப்பட்ட 47 பேரின் சடலங்களை காவல்துறையினர் தோண்டி எடுத்திருந்த நிலையில், இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.அதன்படி தொடர்ச்சியான தேடுதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அப்பகுதியில் இருந்து மொத்தம் 201 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் காணாமல் போயுள்ளதால், தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement