• Nov 19 2024

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் சிதறல்களும் உள்ளக பூசல்களுமே காரணம்- அருட்பணி.ம.லூக் சுட்டிக்காட்டு..!

Sharmi / Nov 16th 2024, 11:40 am
image

கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் சிதறல்களும் உள்ளக பூசல்களுமே காரணம் என அருட்பணி.ம.லூக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ்த் தேசிய பரப்பில் பயணிக்கும் நான் உட்பட அனைவருக்கும் பல செய்திகளை சொல்லி நிற்கின்றது.

இதனை நாம் திறந்த மனதுடன் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஓர் கட்டாயத்தில் தளத்தில் நிற்கின்றோம். 

இந்த தேர்தலில் தேசியக் கட்சி ஒன்று தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் குறிப்பாக வடக்கில் தனது வெற்றியை நிலைநாட்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வீசத்தொடங்கிய அலை பெரும் சுனாமி போன்று அடிக்க முற்பட்ட போது அந்த அலையில் தமிழ்த் தேசிய கட்சிகள் தமது அரசியல் பலத்தை இழந்துள்ளன. 

தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் அரசியல் கட்சிகள் இது போன்ற பல அலைகளை கண்டும் கடந்துதான் வந்திருக்கின்றன்.

அலைகளுக்கு மத்தியில் பெரும் வெற்றிகளையும் கடந்த காலங்களில் கண்டுள்ளன. ஆனால் இம்முறை நிலைமை வேறு. 

தேர்தலின் பின்னர் நான் சந்தித்த சாதாரண வாக்காளர்களின் கருத்துக்கள் மிகவும் ஆழமானதாக உள்ளது.

கட்சிகள் தமிழ்த் தேசியத்தில் பயணிக்கின்றனவோ இல்லையோ நான் சந்தித்த மக்கள் தமிழ்த் தேசிய உணர்வுடன் தான் இந்த தேர்தலை எதிர்கொண்டுள்ளனர் என்பதனை அவர்களுடன் உரையாடும் போது புரிந்துகொள்ள முடிகின்றது. கட்சிகள் தோற்றுப்போயின.

ஆனால் மக்கள் வென்றுள்ளனர் என்பது தான் எனது கருத்து. 

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் “ராஜபக்சாக்களை” எதிர்க்கும் சக்தி கொண்ட எவரையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தான் தற்போதும் உள்ளனர்.

ஒருவேளை இது ஒரு பிழையான முடிவாக இருப்பினும் தமிழ் மக்களுக்கு அநுர ஓர் சுப்பர் கீரோவாக தெரிகின்றார் என்பதில் ஐயமில்லை.

இது இந்திய சினிமாக்களில் கீரோ வில்லனை அடிக்கும் போது ஏற்கனவே வில்லத்தனங்களால் பாதிக்கப்பட்ட ஓர் ரசிகனுக்கு ஏற்படும் திருப்தி போன்றது.  

தேர்தலுக்கு முந்தைய நாள் ஒரு கடையின் சுவரிலே NPP போஸ்டரும் தமிழரசு கட்சியின் போஸ்டரும் ஒட்டப்பட்டிருந்தது. கடைக்காரரிடம் கேட்டேன். அவர் தானே அதனை ஒட்டியுள்ளதாக கூறினார். என்ன விளக்கம் என்று கேட்டபோது இம்முறை எனது வாக்கு வீட்டுக்கு தான். ஆனால் அநுர வேண்டும். பாராளுமன்றத்தினையும் கைப்பற்ற வேண்டும். இந்த நாட்டிற்கு அவர்தான் சரி. எனது ஆதரவு அவருக்கு உண்டு என கூறினார். 

யுத்த வெற்றியையும் இனவாத கருத்துக்களையும் திரும்ப திரும்ப கூறியே கடந்த காலங்களில் ராஜபக்சவினர் தமது ஆட்சியையும் இருப்பு நிலையையும் நிலைநாட்டிக்கொண்டனர்.

தென்பகுதி மக்களும் யுத்த வெற்றிக் கோசத்திற்கான ஆணையை வழங்கினர்.

ஆனால் தொடர்ச்சியாக யுத்தவெற்றியை பற்றி மட்டுமே பேசுவதால் அவர்களினால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. சிங்கள மக்களும் யுத்த வெற்றியையும் இனவாதத்தையும் தாண்டி நாட்டி பொருளாதார வளர்ச்சியை விரும்பினார்கள்.

மகிந்த ராஜபக்ச 2010 இல் 6,015,934 வாக்குகளையும் 2020 இல் கோட்டாபய 6,853,693 வாக்குகளையும் பெற்றிருந்த போதிலும் யுத்த வெற்றி நாயகர்களின்  புதல்வர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 342,781 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

மேலும் 2020இல் 145 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சக்தியுடன்  ஆட்சியமைத்த பொதுஜன பெரமுன இம்முறை 3 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது. 

வடக்கு கிழக்கில் இன்றும் முடிவு காணப்படாத பிரச்சனைகளாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, நில அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தல், நினைவேந்தல்களுக்கான தடை, மேய்ச்சல் தரை பிரச்சினை, கனியவள அகழ்வுகள் என பல காணப்படுகின்றன.

இவை அனைத்தும் நிச்சயம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தான். அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை. ஆனால் இந்த விடயங்களை மாத்திரம் முன்னிருத்தி நாம் இனிவரும் காலங்களில் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்றி செய்தி இம்முறை தரப்பட்டுள்ளது. 

யுத்த வெற்றியை மட்டும் முன்னிறுத்தி எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியாதோ அதுபோலவே யுத்த பாதிப்புக்களையும் அதன் வடுக்களை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற முடியாது. இதனை தமிழ்த் தேசிய கட்சிகள் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

ஏன் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இம்முறை தமிழ்த் தேசிய கட்சிகளை கைவிட்டார்கள், யுத்தம் முடிந்து கடந்த 15 ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட எந்தவிதமான மக்கள் போராட்டங்களிலும் கலந்து கொள்ளதாவர்களை ஏன் தெரிவு செய்தார்கள்.

இரவு பகலாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வீதியில் நின்று போராடிக்கொண்டிருப்பவர்களை ஏன் மக்கள் மறந்தார்கள் என்ற கேள்வி இன்று பரவலாக கேட்கப்படுகின்றது.

ஒருவகையில் அது நியாயமான கேள்வியும் தான். ஆனால் இங்கு நாம் மக்கள் பக்கம் நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். மக்கள் எதனையும் மறக்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகள் தான் தமது நோக்கத்தை மறந்தனர். தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள மக்களையும் மறந்தனர். 

தமிழ்த் தேசியம் என்பது தேர்தல் காலங்களில் வாக்கு வங்கிகளை அதிகரிக்கும் ஓர் உபாயமாக பயன்படுத்தப்படுவது தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. தமிழ்த் தேசியம் என்பது தேர்தலை வெற்றிக்கொள்ள ஊதப்படும் சங்கு அல்ல. மாறாக தமிழ்த் தேசியம் என்பது தமிழ் மக்களின் அறம். தமிழ்த் தேசியம் என்பது அறம் சார்ந்த மக்கள் சமூகத்தை உருவாக்கும். தமிழ்த் தேசியம் என்பது இயற்கை வளங்களை பாதுகாக்கும்.

தமிழ்த் தேசியம் என்பது சமூக நீதிக்காகவும் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும். தமிழ்த் தேசியம் என்பது ஊழலுக்கு எதிராக போராடும். தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்காதவர் தமிழ்த் தேசிய பரப்பில் பயணிக்காதவர் என்ற அளவீட்டை செய்வது தமிழ்த் தேசியம் குறித்த புரிதலில் உள்ள குறைப்பாட்டை காட்டுகின்றது. 

இந்த மண்ணில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தையும் தியாகங்களையும் தமிழ்த் தேசிய கட்சிகள் மறந்து தமக்குள் சுக்குநூறாக உடைந்தும், உடைத்தும் மக்களை மறந்தனர். தனிநபர்கள் தம்மை முன்னிலை படுத்துதல், ஓரங்கட்டுதல், இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காது சகும்வரையில் கதிரையை சூடாக்குதல் போன்ற பல செயற்பாடுகளினால் தமிழ்த் தேசிய கட்சிகள் தாமே தமது தோல்வியை வலிந்து கொண்டுவந்துள்ளனர் என்பது இம்முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளே சாட்சி.

நாம் இங்கு இன்னுமொரு விடயத்தையும் மறக்க கூடாது. இனவாத அரசுகளுக்கு ஆதரவு கொடுத்து தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்ட கட்சிகளை மக்கள் இம்முறை ஓய்வுநிலைக்கு கொண்டு வந்துள்ளனர். அது ஒரு பெரிய மாற்றமே.

யாழ் மாவட்டத்தில் NPP 80830 (24.85விதம்) வாக்குகளை பெற்று போனஸ் ஆசனம் உட்பட 3 ஆசனங்களை தமதாக்கிக் கொண்டது.

ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகள் பெற்ற வாக்குகள் இந்த எண்ணிக்கையைப் பார்க்கிலும் அதிகமாகும். குறிப்பாக வீடு, சைக்கில், சங்கு, மாம்பழம், மான் போன்ற சின்னங்களில் வாக்கு கேட்ட தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் பெற்ற வாக்கு 127121. இது 39.08 வீதமாகும். 2020ம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சி பெற்ற வாக்குகள் 112,967 (3ஆசனங்கள்). அதுபோலதான் வன்னி மாவட்டத்தில் NPP 39,894 (20.37வீதம்) வாக்குகளைப்பெற்று போனஸ் ஆசனம் உட்பட 2 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.

அதேவேளை பிரதான தமிழ்த் தேசிய கட்சிகள் 58,305 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. இது 29.76 வீதமாகும். 

இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணம் தமிழ்த் தேசிய கட்சிகளின் உடைவே. தமிழ்த் தேசியத்தில் பயணிக்கும் மக்கள் இன்னுமொரு தெரிவை நோக்கி சென்றமைக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளின் சிதறல்களும் உள்ளக பூசல்களும். 

பாராளுமன்றத்தில் ஓர் பலமிக்க தமிழ்ப்பிரதிநித்துவம் கட்டியமைக்கப்பட வேண்டுமெனில் மீண்டும் தீர்க்க தரிசனமிக்க தலைவன் உருவாக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக பயணிக்க வேண்டும். அல்லது ஏதோ ஒருவகையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு கோட்டில் நின்றது போல நிற்க வேண்டும். தமிழ்த் தேசிய கட்சிகளை மட்டுமல்ல தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் சுயட்சையாக நின்றவர்களும் கூட்டிணைக்கப்பட வேண்டும். இந்த பணியினை அரசியல் கலப்படம் அற்ற சிவில் சமூகங்கள் முன்னெடுக்க வேண்டும். 

இது சாத்தியமா? நிச்சயம் சாத்தியம். சிதறிப்போயிருக்கும் நாம் மீளவும் தேசமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். நான் ஒன்றாக நிற்கவில்லையெனில் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் பலவீனமான அரசியலாகிவிடும் எனவும் தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் சிதறல்களும் உள்ளக பூசல்களுமே காரணம்- அருட்பணி.ம.லூக் சுட்டிக்காட்டு. கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் சிதறல்களும் உள்ளக பூசல்களுமே காரணம் என அருட்பணி.ம.லூக் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ்த் தேசிய பரப்பில் பயணிக்கும் நான் உட்பட அனைவருக்கும் பல செய்திகளை சொல்லி நிற்கின்றது. இதனை நாம் திறந்த மனதுடன் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஓர் கட்டாயத்தில் தளத்தில் நிற்கின்றோம். இந்த தேர்தலில் தேசியக் கட்சி ஒன்று தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் குறிப்பாக வடக்கில் தனது வெற்றியை நிலைநாட்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வீசத்தொடங்கிய அலை பெரும் சுனாமி போன்று அடிக்க முற்பட்ட போது அந்த அலையில் தமிழ்த் தேசிய கட்சிகள் தமது அரசியல் பலத்தை இழந்துள்ளன. தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் அரசியல் கட்சிகள் இது போன்ற பல அலைகளை கண்டும் கடந்துதான் வந்திருக்கின்றன். அலைகளுக்கு மத்தியில் பெரும் வெற்றிகளையும் கடந்த காலங்களில் கண்டுள்ளன. ஆனால் இம்முறை நிலைமை வேறு. தேர்தலின் பின்னர் நான் சந்தித்த சாதாரண வாக்காளர்களின் கருத்துக்கள் மிகவும் ஆழமானதாக உள்ளது. கட்சிகள் தமிழ்த் தேசியத்தில் பயணிக்கின்றனவோ இல்லையோ நான் சந்தித்த மக்கள் தமிழ்த் தேசிய உணர்வுடன் தான் இந்த தேர்தலை எதிர்கொண்டுள்ளனர் என்பதனை அவர்களுடன் உரையாடும் போது புரிந்துகொள்ள முடிகின்றது. கட்சிகள் தோற்றுப்போயின. ஆனால் மக்கள் வென்றுள்ளனர் என்பது தான் எனது கருத்து. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் “ராஜபக்சாக்களை” எதிர்க்கும் சக்தி கொண்ட எவரையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தான் தற்போதும் உள்ளனர். ஒருவேளை இது ஒரு பிழையான முடிவாக இருப்பினும் தமிழ் மக்களுக்கு அநுர ஓர் சுப்பர் கீரோவாக தெரிகின்றார் என்பதில் ஐயமில்லை. இது இந்திய சினிமாக்களில் கீரோ வில்லனை அடிக்கும் போது ஏற்கனவே வில்லத்தனங்களால் பாதிக்கப்பட்ட ஓர் ரசிகனுக்கு ஏற்படும் திருப்தி போன்றது.  தேர்தலுக்கு முந்தைய நாள் ஒரு கடையின் சுவரிலே NPP போஸ்டரும் தமிழரசு கட்சியின் போஸ்டரும் ஒட்டப்பட்டிருந்தது. கடைக்காரரிடம் கேட்டேன். அவர் தானே அதனை ஒட்டியுள்ளதாக கூறினார். என்ன விளக்கம் என்று கேட்டபோது இம்முறை எனது வாக்கு வீட்டுக்கு தான். ஆனால் அநுர வேண்டும். பாராளுமன்றத்தினையும் கைப்பற்ற வேண்டும். இந்த நாட்டிற்கு அவர்தான் சரி. எனது ஆதரவு அவருக்கு உண்டு என கூறினார். யுத்த வெற்றியையும் இனவாத கருத்துக்களையும் திரும்ப திரும்ப கூறியே கடந்த காலங்களில் ராஜபக்சவினர் தமது ஆட்சியையும் இருப்பு நிலையையும் நிலைநாட்டிக்கொண்டனர். தென்பகுதி மக்களும் யுத்த வெற்றிக் கோசத்திற்கான ஆணையை வழங்கினர். ஆனால் தொடர்ச்சியாக யுத்தவெற்றியை பற்றி மட்டுமே பேசுவதால் அவர்களினால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. சிங்கள மக்களும் யுத்த வெற்றியையும் இனவாதத்தையும் தாண்டி நாட்டி பொருளாதார வளர்ச்சியை விரும்பினார்கள். மகிந்த ராஜபக்ச 2010 இல் 6,015,934 வாக்குகளையும் 2020 இல் கோட்டாபய 6,853,693 வாக்குகளையும் பெற்றிருந்த போதிலும் யுத்த வெற்றி நாயகர்களின்  புதல்வர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 342,781 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. மேலும் 2020இல் 145 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சக்தியுடன்  ஆட்சியமைத்த பொதுஜன பெரமுன இம்முறை 3 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது. வடக்கு கிழக்கில் இன்றும் முடிவு காணப்படாத பிரச்சனைகளாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, நில அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தல், நினைவேந்தல்களுக்கான தடை, மேய்ச்சல் தரை பிரச்சினை, கனியவள அகழ்வுகள் என பல காணப்படுகின்றன. இவை அனைத்தும் நிச்சயம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தான். அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை. ஆனால் இந்த விடயங்களை மாத்திரம் முன்னிருத்தி நாம் இனிவரும் காலங்களில் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்றி செய்தி இம்முறை தரப்பட்டுள்ளது. யுத்த வெற்றியை மட்டும் முன்னிறுத்தி எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியாதோ அதுபோலவே யுத்த பாதிப்புக்களையும் அதன் வடுக்களை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற முடியாது. இதனை தமிழ்த் தேசிய கட்சிகள் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏன் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இம்முறை தமிழ்த் தேசிய கட்சிகளை கைவிட்டார்கள், யுத்தம் முடிந்து கடந்த 15 ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட எந்தவிதமான மக்கள் போராட்டங்களிலும் கலந்து கொள்ளதாவர்களை ஏன் தெரிவு செய்தார்கள். இரவு பகலாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வீதியில் நின்று போராடிக்கொண்டிருப்பவர்களை ஏன் மக்கள் மறந்தார்கள் என்ற கேள்வி இன்று பரவலாக கேட்கப்படுகின்றது. ஒருவகையில் அது நியாயமான கேள்வியும் தான். ஆனால் இங்கு நாம் மக்கள் பக்கம் நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். மக்கள் எதனையும் மறக்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகள் தான் தமது நோக்கத்தை மறந்தனர். தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள மக்களையும் மறந்தனர். தமிழ்த் தேசியம் என்பது தேர்தல் காலங்களில் வாக்கு வங்கிகளை அதிகரிக்கும் ஓர் உபாயமாக பயன்படுத்தப்படுவது தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. தமிழ்த் தேசியம் என்பது தேர்தலை வெற்றிக்கொள்ள ஊதப்படும் சங்கு அல்ல. மாறாக தமிழ்த் தேசியம் என்பது தமிழ் மக்களின் அறம். தமிழ்த் தேசியம் என்பது அறம் சார்ந்த மக்கள் சமூகத்தை உருவாக்கும். தமிழ்த் தேசியம் என்பது இயற்கை வளங்களை பாதுகாக்கும். தமிழ்த் தேசியம் என்பது சமூக நீதிக்காகவும் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும். தமிழ்த் தேசியம் என்பது ஊழலுக்கு எதிராக போராடும். தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்காதவர் தமிழ்த் தேசிய பரப்பில் பயணிக்காதவர் என்ற அளவீட்டை செய்வது தமிழ்த் தேசியம் குறித்த புரிதலில் உள்ள குறைப்பாட்டை காட்டுகின்றது. இந்த மண்ணில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தையும் தியாகங்களையும் தமிழ்த் தேசிய கட்சிகள் மறந்து தமக்குள் சுக்குநூறாக உடைந்தும், உடைத்தும் மக்களை மறந்தனர். தனிநபர்கள் தம்மை முன்னிலை படுத்துதல், ஓரங்கட்டுதல், இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காது சகும்வரையில் கதிரையை சூடாக்குதல் போன்ற பல செயற்பாடுகளினால் தமிழ்த் தேசிய கட்சிகள் தாமே தமது தோல்வியை வலிந்து கொண்டுவந்துள்ளனர் என்பது இம்முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளே சாட்சி.நாம் இங்கு இன்னுமொரு விடயத்தையும் மறக்க கூடாது. இனவாத அரசுகளுக்கு ஆதரவு கொடுத்து தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்ட கட்சிகளை மக்கள் இம்முறை ஓய்வுநிலைக்கு கொண்டு வந்துள்ளனர். அது ஒரு பெரிய மாற்றமே.யாழ் மாவட்டத்தில் NPP 80830 (24.85விதம்) வாக்குகளை பெற்று போனஸ் ஆசனம் உட்பட 3 ஆசனங்களை தமதாக்கிக் கொண்டது. ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகள் பெற்ற வாக்குகள் இந்த எண்ணிக்கையைப் பார்க்கிலும் அதிகமாகும். குறிப்பாக வீடு, சைக்கில், சங்கு, மாம்பழம், மான் போன்ற சின்னங்களில் வாக்கு கேட்ட தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் பெற்ற வாக்கு 127121. இது 39.08 வீதமாகும். 2020ம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சி பெற்ற வாக்குகள் 112,967 (3ஆசனங்கள்). அதுபோலதான் வன்னி மாவட்டத்தில் NPP 39,894 (20.37வீதம்) வாக்குகளைப்பெற்று போனஸ் ஆசனம் உட்பட 2 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. அதேவேளை பிரதான தமிழ்த் தேசிய கட்சிகள் 58,305 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. இது 29.76 வீதமாகும். இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணம் தமிழ்த் தேசிய கட்சிகளின் உடைவே. தமிழ்த் தேசியத்தில் பயணிக்கும் மக்கள் இன்னுமொரு தெரிவை நோக்கி சென்றமைக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளின் சிதறல்களும் உள்ளக பூசல்களும். பாராளுமன்றத்தில் ஓர் பலமிக்க தமிழ்ப்பிரதிநித்துவம் கட்டியமைக்கப்பட வேண்டுமெனில் மீண்டும் தீர்க்க தரிசனமிக்க தலைவன் உருவாக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக பயணிக்க வேண்டும். அல்லது ஏதோ ஒருவகையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு கோட்டில் நின்றது போல நிற்க வேண்டும். தமிழ்த் தேசிய கட்சிகளை மட்டுமல்ல தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் சுயட்சையாக நின்றவர்களும் கூட்டிணைக்கப்பட வேண்டும். இந்த பணியினை அரசியல் கலப்படம் அற்ற சிவில் சமூகங்கள் முன்னெடுக்க வேண்டும். இது சாத்தியமா நிச்சயம் சாத்தியம். சிதறிப்போயிருக்கும் நாம் மீளவும் தேசமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். நான் ஒன்றாக நிற்கவில்லையெனில் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் பலவீனமான அரசியலாகிவிடும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement