• Sep 17 2024

கிளிநொச்சியில் ஆய்வில் ஈடுபடும் சிங்களவர்கள்: மக்களிடம் வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வேண்டும் கும்பல்.!SamugamMedia

Sharmi / Mar 20th 2023, 11:55 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொன்னாவெளி என்ற கிராமத்தின் மிகப்பெரிய வளமான முருகைக்கற்களை அகழ்ந்தெடுத்து அந்த இடத்தில் பாரிய சீமெந்து தொழிற்சாலையை அமைப்பதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனம் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு இல்லை. மக்களிற்கான நியாயமான அபிவிருத்தி இல்லை. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிலத்தை ஆக்கிரமித்தும், விகாரைகளை அமைக்கின்ற அதேவேளை தொழிற்சாலை அமைத்தல் என்ற மாஜையை தோற்றுவித்து அந்த பகுதியில் மக்கள வாழ முடியாதவாறு இடம்பெயர்கின்ற மிகப்பெரிய
காரியத்தை இலங்கை அரசு துள்ளியமாக கையாள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மைய நாட்களிலே அங்கு nசீமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வீடு கட்டி தருகின்றோம், வீதி போட்டு தருகின்றோம், பல்வேறு உதவிகளை செய்கின்றோம் எனக்கூறி ஒரு கும்பல் மக்களிடமிருந்து வெற்றுப்பேப்பர்களில் கையெழுத்துக்களை வாங்குவதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவிகளாக வறுமையின் விளிம்பிலும், வாழுகின்ற மக்கள் இவ்வாறான விடயங்களிற்கு ஆதரவளிப்பது சாதாரணமானது. அதை நாங்கள் யாரும் நிராகரிக்க முடியாது.


அந்த வறுமையையும், ஏழ்மையையும் பயன்படுத்தி, பணத்தின் ஊடாக அப்பகுதி மக்களை குடிபெயர்த்தும் பாரிய முயற்சியை இடம்பெறுவதாகவும் இதனாவ் மிகப்பெரிய ஆபத்து கிளிநொச்சி மண்ணுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஆய்வில் ஈடுபடும் சிங்களவர்கள்: மக்களிடம் வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வேண்டும் கும்பல்.SamugamMedia கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொன்னாவெளி என்ற கிராமத்தின் மிகப்பெரிய வளமான முருகைக்கற்களை அகழ்ந்தெடுத்து அந்த இடத்தில் பாரிய சீமெந்து தொழிற்சாலையை அமைப்பதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனம் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு இல்லை. மக்களிற்கான நியாயமான அபிவிருத்தி இல்லை. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிலத்தை ஆக்கிரமித்தும், விகாரைகளை அமைக்கின்ற அதேவேளை தொழிற்சாலை அமைத்தல் என்ற மாஜையை தோற்றுவித்து அந்த பகுதியில் மக்கள வாழ முடியாதவாறு இடம்பெயர்கின்ற மிகப்பெரிய காரியத்தை இலங்கை அரசு துள்ளியமாக கையாள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.அண்மைய நாட்களிலே அங்கு nசீமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வீடு கட்டி தருகின்றோம், வீதி போட்டு தருகின்றோம், பல்வேறு உதவிகளை செய்கின்றோம் எனக்கூறி ஒரு கும்பல் மக்களிடமிருந்து வெற்றுப்பேப்பர்களில் கையெழுத்துக்களை வாங்குவதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.அப்பாவிகளாக வறுமையின் விளிம்பிலும், வாழுகின்ற மக்கள் இவ்வாறான விடயங்களிற்கு ஆதரவளிப்பது சாதாரணமானது. அதை நாங்கள் யாரும் நிராகரிக்க முடியாது.அந்த வறுமையையும், ஏழ்மையையும் பயன்படுத்தி, பணத்தின் ஊடாக அப்பகுதி மக்களை குடிபெயர்த்தும் பாரிய முயற்சியை இடம்பெறுவதாகவும் இதனாவ் மிகப்பெரிய ஆபத்து கிளிநொச்சி மண்ணுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement