பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞனுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநாகல் பகுதியிலுள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிளின் சில்லை உயர்த்தி, ஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சாசகம் காட்டிய இளைஞனுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை, காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்தமை, இலக்கத்தகடுகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் சரியாக பொருத்தப்படாமை, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயன்றமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கு மீதான நீதிமன்ற விசாரணையின்போது சந்தேக நபர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், இதேபோன்ற குற்றங்களைச் செய்யும், ஏனைய இளைஞர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கும் வகையில் தண்டனையை விதிக்குமாறு, பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து குளியாப்பிட்டி நீதிமன்றம் மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞனுக்கு 55,000 ரூபாய் அபராதம் விதித்துடன், கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை. பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞனுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குருநாகல் பகுதியிலுள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிளின் சில்லை உயர்த்தி, ஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சாசகம் காட்டிய இளைஞனுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை, காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்தமை, இலக்கத்தகடுகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் சரியாக பொருத்தப்படாமை, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயன்றமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.இதனையடுத்து குறித்த வழக்கு மீதான நீதிமன்ற விசாரணையின்போது சந்தேக நபர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.மேலும், இதேபோன்ற குற்றங்களைச் செய்யும், ஏனைய இளைஞர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கும் வகையில் தண்டனையை விதிக்குமாறு, பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து குளியாப்பிட்டி நீதிமன்றம் மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞனுக்கு 55,000 ரூபாய் அபராதம் விதித்துடன், கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.