• Nov 25 2024

லிபியாவின் நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும்..! நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு

Chithra / Feb 5th 2024, 9:53 am
image

 

 இந்த நாட்டை அன்று நாங்கள்  பொறுப்பேற்றிருக்காமல் விட்டிருந்தால், லிபியா போன்ற நிலைமைக்கு நாடு செல்ல இடமிருந்தது என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சுமார் நானூற்று ஐம்பது வருடங்களாக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்திருந்த எமது நாடு, .டி.எஸ்.சேனநாயக்கா உள்ளிட்ட தேசிய மதத் தலைவர்களுடன் உயிர் தியாகம் செய்து முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே சர்வதேசத்துக்கு முன்னால் சுதந்திர தேசமாக மாறியது.

நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்கள் கடந்துள்ளன. கடந்த 4வருட காலத்துக்குள் கொவிட் தொற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினை போன்ற விடயங்கள் காரணமாக ஏற்பட்ட நிலைமைகளினால் இந்த நாடு அராஜகமானது.

 நாட்டை பொறுப்பேற்க எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை.

 அன்று இந்த நாட்டை பொறுப்பேற்கும் சவாலை யாரும் ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்திலேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நாங்கள் அராஜகமாகிய நாட்டை பொறுப்பேற்றோம். 

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சுமார் 18 மாதங்களுக்குள் பொருளாதார மேம்பாட்டை நோக்கி இந்த நாட்டை கொண்டுவந்திருக்கிறோம். 

76ஆவது சுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கும் இந்த வருடத்துக்குள் மக்களின் கஷ்டங்கள் ஒழியக்கூடிய, செளபாக்கியத்தை அடையும் வருடமாக மாறும் என நம்புகிறோம் என்றார்.

லிபியாவின் நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும். நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு   இந்த நாட்டை அன்று நாங்கள்  பொறுப்பேற்றிருக்காமல் விட்டிருந்தால், லிபியா போன்ற நிலைமைக்கு நாடு செல்ல இடமிருந்தது என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.சுமார் நானூற்று ஐம்பது வருடங்களாக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்திருந்த எமது நாடு, .டி.எஸ்.சேனநாயக்கா உள்ளிட்ட தேசிய மதத் தலைவர்களுடன் உயிர் தியாகம் செய்து முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே சர்வதேசத்துக்கு முன்னால் சுதந்திர தேசமாக மாறியது.நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்கள் கடந்துள்ளன. கடந்த 4வருட காலத்துக்குள் கொவிட் தொற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினை போன்ற விடயங்கள் காரணமாக ஏற்பட்ட நிலைமைகளினால் இந்த நாடு அராஜகமானது. நாட்டை பொறுப்பேற்க எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை. அன்று இந்த நாட்டை பொறுப்பேற்கும் சவாலை யாரும் ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்திலேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நாங்கள் அராஜகமாகிய நாட்டை பொறுப்பேற்றோம். தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சுமார் 18 மாதங்களுக்குள் பொருளாதார மேம்பாட்டை நோக்கி இந்த நாட்டை கொண்டுவந்திருக்கிறோம். 76ஆவது சுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கும் இந்த வருடத்துக்குள் மக்களின் கஷ்டங்கள் ஒழியக்கூடிய, செளபாக்கியத்தை அடையும் வருடமாக மாறும் என நம்புகிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement