• Nov 26 2024

ஒரு சிலரின் அற்பத்தனமான சலுகைகளுக்காக மாணவர் சமூகம் பாழாக்கப்படுகின்றது. - இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் எச்சரிக்கை..!!

Tamil nila / Feb 28th 2024, 7:45 pm
image

இன்று ஒருசிலரின் அற்பத்தனமான சலுகைகளுக்காகவும். விலைபோகின்ற தன்மைக்காகவும் மாணவர் சமுதாயம் பழாக்கப்படுகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கருத்துத் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

குறித்த பாடசாலைக்கு இலங்கைப் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் முறையான கட்டமைப்பின் கீழ் தேசியப் பாடசாலைக்குத் தகுதியான அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டார். 

ஆயினும் பாடசாலையில் இருந்த அதிபர் ஒருவரின் ஓய்வின் பின்னர் கல்வி நிர்வாக சேவையினைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக பதில் அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். 

முறைப்படி அதிபர் நியமனம் பெற்று வந்த புதிய அதிபர் பாடசாலைக்கு வந்தவுடன் பொறுப்புகளை கையளித்துவிட்டுச் செல்லவேண்டிய அந்தப் பதில் அதிபர் இன்று வரையில் பொறுப்புகளை கையாளிக்காமல் தட்டிக்கழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பது பாரிய குற்றமாகும். 

இப்படி அரச சேவையில் உள்ள ஒருவர் அரச நியமங்களை மீறுவது என்பது அவருக்கு பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அவருக்கு தெளிவு படுத்த விரும்புகின்றோம். 

இவரின் இச் செயற்பாட்டிற்குப் பின்னால் யார் இருக்கின்றார்கள்? அவ்வாறானவர்கள் தமது தேவை முடிந்த பின்னர் இவரை கைவிட்டு விடுவார்கள். பாதிக்கப்படுவது, விளைவுகளை அனுபவிக்கக் போவது தற்காலிக பதில் அதிபர் தான்.

மாணவர்களை சிலர் தவறாகத் தூண்டி விடப்பட்டிருக்கின்றனர். அன்மையில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது அவ் இடத்திற்கு நாம் சென்றிருந்தோம். மாணவர்கள் கூறிய விடயம் தம்மை தூண்டி விட்டே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக  இவை அம் மாணவர்களை தவறான வழிகளில் ஈடுபடுத்துகின்ற செயற்பாடு. 

சில அற்ப சலுகைகளுக்காகவும், விலைபோகின்ற தன்மைகளுக்காகவும் மாணவர் சமூகம் பழடிக்கப்படுகின்றது. இது போன்றதொரு செயற்பாடு வேலணை மத்திய கல்லூரியிலும் இடம் பெற்றது. 

இப்போது அது நீக்கப்பட்டு அப் பாடசாலை திறமையாக செயற்படுகின்றது என்றார். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் இரண்டாக பிழவுபட்டுள்ளதே என்று பத்திரிகையாளர்  ஒருவர் கேட்டதற்கு நாம் சட்டத்தின் படி சரியான பக்கம் யார் நிற்கின்றார்களோ அவர்களுடன் இணைந்து பாடசாலையின் சட்ட ரீதியான  அதிபர் தெரிவுக்காக பாடுபடுவோம் - என்று குறிப்பிட்டார்.

ஒரு சிலரின் அற்பத்தனமான சலுகைகளுக்காக மாணவர் சமூகம் பாழாக்கப்படுகின்றது. - இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் எச்சரிக்கை. இன்று ஒருசிலரின் அற்பத்தனமான சலுகைகளுக்காகவும். விலைபோகின்ற தன்மைக்காகவும் மாணவர் சமுதாயம் பழாக்கப்படுகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கருத்துத் தெரிவித்தார்.இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பாடசாலைக்கு இலங்கைப் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் முறையான கட்டமைப்பின் கீழ் தேசியப் பாடசாலைக்குத் தகுதியான அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆயினும் பாடசாலையில் இருந்த அதிபர் ஒருவரின் ஓய்வின் பின்னர் கல்வி நிர்வாக சேவையினைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக பதில் அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். முறைப்படி அதிபர் நியமனம் பெற்று வந்த புதிய அதிபர் பாடசாலைக்கு வந்தவுடன் பொறுப்புகளை கையளித்துவிட்டுச் செல்லவேண்டிய அந்தப் பதில் அதிபர் இன்று வரையில் பொறுப்புகளை கையாளிக்காமல் தட்டிக்கழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பது பாரிய குற்றமாகும். இப்படி அரச சேவையில் உள்ள ஒருவர் அரச நியமங்களை மீறுவது என்பது அவருக்கு பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அவருக்கு தெளிவு படுத்த விரும்புகின்றோம். இவரின் இச் செயற்பாட்டிற்குப் பின்னால் யார் இருக்கின்றார்கள் அவ்வாறானவர்கள் தமது தேவை முடிந்த பின்னர் இவரை கைவிட்டு விடுவார்கள். பாதிக்கப்படுவது, விளைவுகளை அனுபவிக்கக் போவது தற்காலிக பதில் அதிபர் தான்.மாணவர்களை சிலர் தவறாகத் தூண்டி விடப்பட்டிருக்கின்றனர். அன்மையில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது அவ் இடத்திற்கு நாம் சென்றிருந்தோம். மாணவர்கள் கூறிய விடயம் தம்மை தூண்டி விட்டே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக  இவை அம் மாணவர்களை தவறான வழிகளில் ஈடுபடுத்துகின்ற செயற்பாடு. சில அற்ப சலுகைகளுக்காகவும், விலைபோகின்ற தன்மைகளுக்காகவும் மாணவர் சமூகம் பழடிக்கப்படுகின்றது. இது போன்றதொரு செயற்பாடு வேலணை மத்திய கல்லூரியிலும் இடம் பெற்றது. இப்போது அது நீக்கப்பட்டு அப் பாடசாலை திறமையாக செயற்படுகின்றது என்றார். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் இரண்டாக பிழவுபட்டுள்ளதே என்று பத்திரிகையாளர்  ஒருவர் கேட்டதற்கு நாம் சட்டத்தின் படி சரியான பக்கம் யார் நிற்கின்றார்களோ அவர்களுடன் இணைந்து பாடசாலையின் சட்ட ரீதியான  அதிபர் தெரிவுக்காக பாடுபடுவோம் - என்று குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement