மதுரங்குளி - விருதோடையில் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவான ரியாஸ் ரிஸ்லின் அஹ்மட் என்ற மாணவன், தனக்கு கல்வி கற்பித்து கொடுத்த ஆசிரியர்களுக்கு பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை (10) குறித்த மாணவனின் இல்லத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல், இம்முறை கற்பிட்டி பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் விருதோடை வட்டாரத்தில் இருந்து உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மத் ஆஷிக், ஓய்வுபெற்ற அதிபர் எம்.எச்.அமீன், விருதோடை மு.ம.வி பிரதி அதிபர் ஜவாத் மரைக்கார், புழுதிவயல் மு.வி விஞ்ஞான ஆசிரியர் ஏ.எம்.ஜிப்ரி உட்பட உலமாக்கள், ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த மாணவன் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2ஏ. பி பெற்று மருத்துவ துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கற்பித்த ஆசிரியர்களை கௌரவித்த மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவன் மதுரங்குளி - விருதோடையில் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவான ரியாஸ் ரிஸ்லின் அஹ்மட் என்ற மாணவன், தனக்கு கல்வி கற்பித்து கொடுத்த ஆசிரியர்களுக்கு பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தார்.இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை (10) குறித்த மாணவனின் இல்லத்தில் இடம்பெற்றது.மேற்படி நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல், இம்முறை கற்பிட்டி பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் விருதோடை வட்டாரத்தில் இருந்து உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மத் ஆஷிக், ஓய்வுபெற்ற அதிபர் எம்.எச்.அமீன், விருதோடை மு.ம.வி பிரதி அதிபர் ஜவாத் மரைக்கார், புழுதிவயல் மு.வி விஞ்ஞான ஆசிரியர் ஏ.எம்.ஜிப்ரி உட்பட உலமாக்கள், ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.குறித்த மாணவன் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2ஏ. பி பெற்று மருத்துவ துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.