• Apr 26 2024

ஆயிரக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சூரிய அஸ்தமனம்..! samugammedia

Chithra / Jun 1st 2023, 6:52 am
image

Advertisement

நியூயார்க்கின் பரப்பரப்பான வீதிகளில் ஒன்று மன்ஹாட்டன். வானளவு உயர்ந்த கட்டடங்களால் உலக அளவில் பெயர் பெற்றது மன்ஹாட்டன்.

இதில் மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் நேற்றுமுன்தினம் மாலை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இயற்கையின் கண்கொள்ளாக் காட்சியை கண்டு மகிழ்ந்ததுடன், தங்களின் கையடக்கத் தொலைபேசிகளில் அதனை பதிவு செய்துள்ளனர்.


மன்ஹாட்டனின் வானளாவி உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில், பிரமாண்ட சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது.

சிவப்பு – செம்மஞ்சள் நிற வண்ணத்துடன் வானத்தில் பெரிய நெருப்பு பந்துபோல் சூரியன் கட்டடங்களுக்கு நடுவே கீழே சென்றுகொண்டிருந்தது.


இதனால் மன்ஹாட்டனில் சூரியன் மறையும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

பூமி எப்போதும் நேராக சுழல்வது இல்லை. 23 டிகிரி அச்சில் சாய்வாகத்தான் சுழல்கிறது. இதனால் தான் நாம் பருவ மாறுதல்களை மாறி மாறி சந்திக்கிறோம்.


இவ்வாறு சாய்வாக சுழலும்போது உலக நாடுகளில் சில பகுதிகளில் சூரியனின் அஸ்தமனங்களும், உதயங்களும் இவ்வாறு பிரமாண்டமாக கண்கொள்ளாக் காட்சியாக அமைவது உண்டு என வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இம்மாதிரியான சூரிய அஸ்தமனம் ஜூலை மாதம் அங்கு மீண்டும் நிகழும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.



ஆயிரக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சூரிய அஸ்தமனம். samugammedia நியூயார்க்கின் பரப்பரப்பான வீதிகளில் ஒன்று மன்ஹாட்டன். வானளவு உயர்ந்த கட்டடங்களால் உலக அளவில் பெயர் பெற்றது மன்ஹாட்டன்.இதில் மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் நேற்றுமுன்தினம் மாலை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இயற்கையின் கண்கொள்ளாக் காட்சியை கண்டு மகிழ்ந்ததுடன், தங்களின் கையடக்கத் தொலைபேசிகளில் அதனை பதிவு செய்துள்ளனர்.மன்ஹாட்டனின் வானளாவி உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில், பிரமாண்ட சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது.சிவப்பு – செம்மஞ்சள் நிற வண்ணத்துடன் வானத்தில் பெரிய நெருப்பு பந்துபோல் சூரியன் கட்டடங்களுக்கு நடுவே கீழே சென்றுகொண்டிருந்தது.இதனால் மன்ஹாட்டனில் சூரியன் மறையும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.பூமி எப்போதும் நேராக சுழல்வது இல்லை. 23 டிகிரி அச்சில் சாய்வாகத்தான் சுழல்கிறது. இதனால் தான் நாம் பருவ மாறுதல்களை மாறி மாறி சந்திக்கிறோம்.இவ்வாறு சாய்வாக சுழலும்போது உலக நாடுகளில் சில பகுதிகளில் சூரியனின் அஸ்தமனங்களும், உதயங்களும் இவ்வாறு பிரமாண்டமாக கண்கொள்ளாக் காட்சியாக அமைவது உண்டு என வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.இம்மாதிரியான சூரிய அஸ்தமனம் ஜூலை மாதம் அங்கு மீண்டும் நிகழும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.Manhattanhenge 2023 pic.twitter.com/PiTbBcQN2Q— L. Vural Elibol (@vuralelibol) May 30, 2023

Advertisement

Advertisement

Advertisement