• Nov 28 2024

யாழில் இரவிரவாக வீடுகளில் தேடுதல் நடத்திய வாள்வெட்டு குழுவினர்...! மக்கள் அச்சம்...!samugammedia

Sharmi / Dec 21st 2023, 10:57 am
image

கடந்த சில நாட்களாக குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவத்தின் தொடர்ச்சியாக நேற்றும் வாள்வெட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதில் அதே இடத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், நேற்றிரவு வாள் வெட்டு குழு ஒன்று தமது எதிராளிகளை தேடி குடத்தனை கிழக்கு, அம்பன் கிழக்கு பகுதிகளில் தேடுதல் நடாத்தியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குடத்தனை சிறப்பு அதிரடி படையினர் நேற்று மதியம் இரண்டு குழுக்களிடையே இடம்பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதேவேளை பருத்தித்துறை பொலிஸாரும் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடி படை சென்ற பின்னர் நேற்றிரவு பதினொரு மணிவரை வீடுகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டதோடு, எதிரணியை தேடி தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உரியதரப்புக்கள் மேற்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


யாழில் இரவிரவாக வீடுகளில் தேடுதல் நடத்திய வாள்வெட்டு குழுவினர். மக்கள் அச்சம்.samugammedia கடந்த சில நாட்களாக குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவத்தின் தொடர்ச்சியாக நேற்றும் வாள்வெட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.இதில் அதே இடத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை நேற்று முன்தினம் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.அத்துடன், நேற்றிரவு வாள் வெட்டு குழு ஒன்று தமது எதிராளிகளை தேடி குடத்தனை கிழக்கு, அம்பன் கிழக்கு பகுதிகளில் தேடுதல் நடாத்தியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.குடத்தனை சிறப்பு அதிரடி படையினர் நேற்று மதியம் இரண்டு குழுக்களிடையே இடம்பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.இதேவேளை பருத்தித்துறை பொலிஸாரும் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடி படை சென்ற பின்னர் நேற்றிரவு பதினொரு மணிவரை வீடுகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டதோடு, எதிரணியை தேடி தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உரியதரப்புக்கள் மேற்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement