• Nov 26 2024

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்...! சாந்தனின் இறுதிக்கிரியைகள் இன்று..!

Sharmi / Mar 4th 2024, 9:27 am
image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 28 ஆம் திகதி காலை உயிரிழந்த  தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் எனப்படும் சாந்தனின் வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது ஊரான உடுப்பிட்டியை நேற்றையதினம்(03) மாலை வந்தடைந்தது. 

உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட வித்துடலை, அனைவரது நெஞ்சையும்  கணக்கவைக்கும் வகையில், "அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்" என கூறிய சாந்தனுடைய சகோதரி தீப ஆராதனை செய்து  வரவேற்றார்.

அதேவேளை சாந்தனின் பூதவுடலுக்கு  பல்வேறு தரப்பினரும் இறுதி அஞ்சலியை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  வவுனியாவில் நேற்றையதினம் காலை (03) காலை 8 மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் வித்துடல் தாங்கிய  ஊர்தி A9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சிக்கு எடுத்துவரப்பட்டு  அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.

பின்னர்  வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

இதனிடையே சாந்தனின்  இறுதிக் கிரியைகள், அவரது இல்லத்தில் இன்றையதினம் (4) காலை 10:00 மணியளவில் ஆரம்பமாகும். 

இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்றதும் வித்துடல் எடுத்து செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் நினைவேந்தல் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து வித்துடல் சாந்தன் அண்ணனின்  பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும்.

அத்துடன் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம். சாந்தனின் இறுதிக்கிரியைகள் இன்று. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 28 ஆம் திகதி காலை உயிரிழந்த  தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் எனப்படும் சாந்தனின் வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது ஊரான உடுப்பிட்டியை நேற்றையதினம்(03) மாலை வந்தடைந்தது. உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட வித்துடலை, அனைவரது நெஞ்சையும்  கணக்கவைக்கும் வகையில், "அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்" என கூறிய சாந்தனுடைய சகோதரி தீப ஆராதனை செய்து  வரவேற்றார்.அதேவேளை சாந்தனின் பூதவுடலுக்கு  பல்வேறு தரப்பினரும் இறுதி அஞ்சலியை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை,  வவுனியாவில் நேற்றையதினம் காலை (03) காலை 8 மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் வித்துடல் தாங்கிய  ஊர்தி A9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சிக்கு எடுத்துவரப்பட்டு  அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.பின்னர்  வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனிடையே சாந்தனின்  இறுதிக் கிரியைகள், அவரது இல்லத்தில் இன்றையதினம் (4) காலை 10:00 மணியளவில் ஆரம்பமாகும். இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்றதும் வித்துடல் எடுத்து செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் நினைவேந்தல் இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து வித்துடல் சாந்தன் அண்ணனின்  பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும்.அத்துடன் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement