• Apr 28 2024

உறவை இழந்தும் உடைமைகளையும் இழந்த தமிழினம் சுதந்திரதினம் தொடர்பில் சிந்திக்க தயாரில்லை- ஆறு.திருமுருகன் ஆதங்கம்!

Sharmi / Feb 1st 2023, 4:22 pm
image

Advertisement

இலங்கையிலே  எத்தனையோ உயிர்களைக் காவு கொடுத்து எவ்வளவோ பெறுமதியான உடைமைகளை இழந்தும் 75 வருடங்களாக உரிய சுதந்திரமானது தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

சமூகம் ஊடகத்திற்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்து காணப்படுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் காணப்படுவதேயாகும்.
ஆரம்பத்திலே தென்னிலங்கையில் சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவதாகக் கூறி பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு பல கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தேறியுள்ளன.  பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா அரசு இலங்கை - இந்தியா ஒப்பந்தம் முலம் 13 ம் திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்து  மாகாண சபை முறைமையை அமுலாக்கி தமிழர்களுக்காக சுயநிர்ணய உரிமையை வழங்குவதாகக் கூறியும் இதுவரை எவ்விதமான விடயங்களும் வழங்கப்படவில்லை.

தற்போது நாடு கடனில் மூழ்கியுள்ளது இன்னொரு இனத்தை அழித்தொழிப்பதற்கான பாதுகாப்புச் செலவுகளுக்காகப் பல நாடுகளிடம் கடன் வாங்கி நாட்டின் பொருளாதாரத்தை முழ்கடிக்கச் செய்துவிட்டார்கள். இதனால் தேயிலைத் தோட்டங்களெல்லாம் செயலற்றுப் போய்க்கொண்டிருக்கின்றன , பல கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மலையக மக்களை 200 ஆண்டுகள் கடந்தும் ஒருவித அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்யாது அடிமைகளாகவே வைத்திருக்கின்றார்கள். இங்கு வடகிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினையுடன் மலையக மக்களின் பிரச்சினையும் பிரதானமாகக் காணப்படுகின்றது.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க் வேண்டும் என்ற கட்டாயம் உலக அளவில் நிலவ ஆட்சியாளர்ளும் தமிழர்களுக்கு தீர்வு வழங்குதல் தொடர்பாக முயற்சிகளை முன்னெடுத்தாலும் சிங்கள அரசியல் சார்பானவர்களும  ஆன்மீக்  சார்ந்தவர்களும் தீர்வினைத் தருவதற்குத் தயாரில்லை.

வடகிழக்குத் தமிழர் உட்பட மலையக உறவுகளும் இதுவரை காலமும் எந்தவொரு சுதந்திரத்தையும் சரியாக அனுபவிக்காது பல உயிர்களையும் உடமைகளையும் இழந்த வலியுடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எனவே இவற்றுக்கெல்லாம் நியாயமான தீர்வொன்று வழங்கப்பட்டால் மாத்திரமே சுதந்திர தினம் பற்றிச் சிந்திக்க முடியும்  என்றார்

உறவை இழந்தும் உடைமைகளையும் இழந்த தமிழினம் சுதந்திரதினம் தொடர்பில் சிந்திக்க தயாரில்லை- ஆறு.திருமுருகன் ஆதங்கம் இலங்கையிலே  எத்தனையோ உயிர்களைக் காவு கொடுத்து எவ்வளவோ பெறுமதியான உடைமைகளை இழந்தும் 75 வருடங்களாக உரிய சுதந்திரமானது தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.சமூகம் ஊடகத்திற்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்து காணப்படுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் காணப்படுவதேயாகும். ஆரம்பத்திலே தென்னிலங்கையில் சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவதாகக் கூறி பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு பல கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தேறியுள்ளன.  பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா அரசு இலங்கை - இந்தியா ஒப்பந்தம் முலம் 13 ம் திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்து  மாகாண சபை முறைமையை அமுலாக்கி தமிழர்களுக்காக சுயநிர்ணய உரிமையை வழங்குவதாகக் கூறியும் இதுவரை எவ்விதமான விடயங்களும் வழங்கப்படவில்லை.தற்போது நாடு கடனில் மூழ்கியுள்ளது இன்னொரு இனத்தை அழித்தொழிப்பதற்கான பாதுகாப்புச் செலவுகளுக்காகப் பல நாடுகளிடம் கடன் வாங்கி நாட்டின் பொருளாதாரத்தை முழ்கடிக்கச் செய்துவிட்டார்கள். இதனால் தேயிலைத் தோட்டங்களெல்லாம் செயலற்றுப் போய்க்கொண்டிருக்கின்றன , பல கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மலையக மக்களை 200 ஆண்டுகள் கடந்தும் ஒருவித அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்யாது அடிமைகளாகவே வைத்திருக்கின்றார்கள். இங்கு வடகிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினையுடன் மலையக மக்களின் பிரச்சினையும் பிரதானமாகக் காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க் வேண்டும் என்ற கட்டாயம் உலக அளவில் நிலவ ஆட்சியாளர்ளும் தமிழர்களுக்கு தீர்வு வழங்குதல் தொடர்பாக முயற்சிகளை முன்னெடுத்தாலும் சிங்கள அரசியல் சார்பானவர்களும  ஆன்மீக்  சார்ந்தவர்களும் தீர்வினைத் தருவதற்குத் தயாரில்லை. வடகிழக்குத் தமிழர் உட்பட மலையக உறவுகளும் இதுவரை காலமும் எந்தவொரு சுதந்திரத்தையும் சரியாக அனுபவிக்காது பல உயிர்களையும் உடமைகளையும் இழந்த வலியுடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எனவே இவற்றுக்கெல்லாம் நியாயமான தீர்வொன்று வழங்கப்பட்டால் மாத்திரமே சுதந்திர தினம் பற்றிச் சிந்திக்க முடியும்  என்றார்

Advertisement

Advertisement

Advertisement