• May 03 2024

தமிழ் இளைஞர்கள் கொதிப்படைந்து விட்டார்கள்; பாரிய போராட்டத்தை எதிர்பாருங்கள்- அரசை எச்சரிக்கும் முன்னாள் எம்பி!!

Tamil nila / Jan 22nd 2023, 11:49 pm
image

Advertisement

அரசின் செயற்பாடுகளால் தமிழ் இளைஞர்கள் கொதிப்படைய தொடக்கி விட்டார்கள் இதன் காரணமாக பாரிய போராட்டத்துக்கு தயாராகிவிட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அரசுக்கு எச்சரித்துள்ளார். 


நேற்று ( 21.01.2023) வட்டுக்கோட்டை தமிரசு கட்சி அலுவலகத்தில்  இடம்பெற்ற 2023ஆம் ஆண்டிற்கான பொங்கல் நிகழ்வில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே   மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 


அவர் மேலும் தெரிவிக்கையில்,


இன்று மீண்டும் அரகலய சம்பவங்கள் போன்று யாழ்ப்பாணத்தில் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்ட போராட்டத்தினை எமது ஜனாதிபதி ஆயுத பலத்துடன் அடக்க முற்பட்டார்.


இந்த ஜனாதிபதி மிதவாதியாக முன்னர் பார்த்து இருந்தோம். ஆனால் இவருடைய கை சுத்தம் என்று இருந்தது. சுத்தம் என்று சொல்லும்போது ரத்தக்கரை அற்ற கை அதற்கு மேலாக லஞ்ச ஊழல் எதிலும் இவர் மாட்டுப்படவில்லை. இவ்வாறான ஒருவர் தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு போகின்றார். 


குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் அதிலும் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் எந்த ஆயுதமும் இன்றி ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு.


அடக்குமுறையை பிரயோகிப்பது மிகத் தவறு அடக்குமுறையை பிரயோகித்திருக்கக்கூடாது. 


இவ்வாறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு தான் நமது குழந்தைகள்  அன்று தங்களுடைய எண்ணத்தில் வித்தியாசமாக வளர்ந்தார்கள்.பின்னர் அது ஆயுதங்கள் தூக்கும் கட்டத்தில் வந்தது.


மீண்டும் அதே நிலையை தொடங்குகின்றார்கள் எது நடந்ததோ 70களில் அதே நிலை மீண்டும் தொடங்குகின்றது.


இதனை முன்னின்று செய்த வேலன் ஸ்வாமிகளை கைது செய்தார்கள்;

இந்த கைது அன்று தான் கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலை இல்லை இதை ஒரு பாடமாகக் கொள்ளுங்கள். என்று கூறப்பட்டுள்ளது. அது ஏன்  ?  


வடக்கு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியங்கள் சேர்ந்து ஒரு போராட்டத்தை முன்னெடுக்கப்போகின்றார்கள் அதற்கு இப்போது இவர்கள் பயந்து விட்டார்கள் அதன் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டால் பின் வாங்குவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. ஜனாதிபதியும் நினைக்கின்றார். 


ஆனால் நடந்தேறும் பெப்ரவரி முதலாம் திகதி தொடங்கி பெரிய அளவில் நடக்கப் போகின்றது இலங்கை சுதந்திரம் அடைந்த பெப்ரவரி 4ஆம் திகதி அன்று பாரிய போராட்டம் நடக்கப்போகிறது - 


எனவே இவற்றையெல்லாம் முடக்குவதற்காக அன்று இவர்கள் வேலன்  சுவாமியை கைது செய்தார்கள்,


பின்னர் புதிதாக ஒரு கதையை தொடங்கி உள்ளார்கள் மேலும் ஜவரை கைது செய்யப் போவதாகவும் அதில் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்குவார்கள் இன்று மாணவர்களை விரட்டினால்  அவர்கள் மீண்டும் வர மாட்டார்கள் என்று  யோசிக்கின்றார்கள்.


அனால் தவறு எது 70 களில் நடந்ததோ அதை மீண்டும் ஊக்குவித்து கொண்டு போகின்றார்கள். இவ்வாறான  சந்தர்ப்பங்கள் நடைபெறுகின்ற பொழுது இளைஞர்கள் விரக்தி அடைவார்கள். விரக்தியடைந்து வேறு கட்டங்களுக்கு போவார்கள்,. அரசாங்கம் இதனை புரிந்து கொள்ள வேண்டும் . ஜனநாயக முறைப்படி நீங்கள் எதுவும் செய்யலாம். இங்கே தெல்லிப்பழையில்ஒரு கூட்டம் நடந்தது நாங்கள் அங்கு சத்தியாக்கிரகத்தில்  இருந்தோம் அதில் வந்து  இன்றைய ஜனாதிபதி அவர்கள், அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது கலந்து கொண்டார். 


ஜனநாயகம் என்றால் என்ன என்று ஆயுதம் தூக்கிய காவல்துறையினருக்கும் கட்டாயம் சொல்ல வேண்டும்.


அரசாங்கத்தில் ஆயுதம் வைத்திருக்கின்ற அனைவருக்கும் முதலில் ஜனநாயகம் என்றால் என்ன என்று படிப்பிக்க வேண்டும் கொழும்பில் அவர்களுடைய அணுகுமுறை வேறாகவும் யாழ்ப்பாணத்தில் அணுகுமுறை வேறாகவும் காணப்படுகின்றது 


நல்லிணக்கம் அறவே ஏற்படாது உங்களுடைய பதவிகளை தக்க வைப்பதற்காக நீங்கள் எல்லாவற்றிற்கும் அவர்களை பீதி அடைய செய்து உங்களுடைய ஆட்சி கொண்டு செல்ல பார்க்கின்றீர்கள். அது முடியாது. 


முக்கியமாக இளைஞர்கள் தற்போது கொதிப்படைய தொடக்கி விட்டார்கள்  -என்று கூறினார்.

தமிழ் இளைஞர்கள் கொதிப்படைந்து விட்டார்கள்; பாரிய போராட்டத்தை எதிர்பாருங்கள்- அரசை எச்சரிக்கும் முன்னாள் எம்பி அரசின் செயற்பாடுகளால் தமிழ் இளைஞர்கள் கொதிப்படைய தொடக்கி விட்டார்கள் இதன் காரணமாக பாரிய போராட்டத்துக்கு தயாராகிவிட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அரசுக்கு எச்சரித்துள்ளார். நேற்று ( 21.01.2023) வட்டுக்கோட்டை தமிரசு கட்சி அலுவலகத்தில்  இடம்பெற்ற 2023ஆம் ஆண்டிற்கான பொங்கல் நிகழ்வில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே   மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று மீண்டும் அரகலய சம்பவங்கள் போன்று யாழ்ப்பாணத்தில் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்ட போராட்டத்தினை எமது ஜனாதிபதி ஆயுத பலத்துடன் அடக்க முற்பட்டார்.இந்த ஜனாதிபதி மிதவாதியாக முன்னர் பார்த்து இருந்தோம். ஆனால் இவருடைய கை சுத்தம் என்று இருந்தது. சுத்தம் என்று சொல்லும்போது ரத்தக்கரை அற்ற கை அதற்கு மேலாக லஞ்ச ஊழல் எதிலும் இவர் மாட்டுப்படவில்லை. இவ்வாறான ஒருவர் தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு போகின்றார். குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் அதிலும் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் எந்த ஆயுதமும் இன்றி ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு.அடக்குமுறையை பிரயோகிப்பது மிகத் தவறு அடக்குமுறையை பிரயோகித்திருக்கக்கூடாது. இவ்வாறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு தான் நமது குழந்தைகள்  அன்று தங்களுடைய எண்ணத்தில் வித்தியாசமாக வளர்ந்தார்கள்.பின்னர் அது ஆயுதங்கள் தூக்கும் கட்டத்தில் வந்தது.மீண்டும் அதே நிலையை தொடங்குகின்றார்கள் எது நடந்ததோ 70களில் அதே நிலை மீண்டும் தொடங்குகின்றது.இதனை முன்னின்று செய்த வேலன் ஸ்வாமிகளை கைது செய்தார்கள்;இந்த கைது அன்று தான் கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலை இல்லை இதை ஒரு பாடமாகக் கொள்ளுங்கள். என்று கூறப்பட்டுள்ளது. அது ஏன்    வடக்கு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியங்கள் சேர்ந்து ஒரு போராட்டத்தை முன்னெடுக்கப்போகின்றார்கள் அதற்கு இப்போது இவர்கள் பயந்து விட்டார்கள் அதன் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டால் பின் வாங்குவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. ஜனாதிபதியும் நினைக்கின்றார். ஆனால் நடந்தேறும் பெப்ரவரி முதலாம் திகதி தொடங்கி பெரிய அளவில் நடக்கப் போகின்றது இலங்கை சுதந்திரம் அடைந்த பெப்ரவரி 4ஆம் திகதி அன்று பாரிய போராட்டம் நடக்கப்போகிறது - எனவே இவற்றையெல்லாம் முடக்குவதற்காக அன்று இவர்கள் வேலன்  சுவாமியை கைது செய்தார்கள்,பின்னர் புதிதாக ஒரு கதையை தொடங்கி உள்ளார்கள் மேலும் ஜவரை கைது செய்யப் போவதாகவும் அதில் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்குவார்கள் இன்று மாணவர்களை விரட்டினால்  அவர்கள் மீண்டும் வர மாட்டார்கள் என்று  யோசிக்கின்றார்கள்.அனால் தவறு எது 70 களில் நடந்ததோ அதை மீண்டும் ஊக்குவித்து கொண்டு போகின்றார்கள். இவ்வாறான  சந்தர்ப்பங்கள் நடைபெறுகின்ற பொழுது இளைஞர்கள் விரக்தி அடைவார்கள். விரக்தியடைந்து வேறு கட்டங்களுக்கு போவார்கள்,. அரசாங்கம் இதனை புரிந்து கொள்ள வேண்டும் . ஜனநாயக முறைப்படி நீங்கள் எதுவும் செய்யலாம். இங்கே தெல்லிப்பழையில்ஒரு கூட்டம் நடந்தது நாங்கள் அங்கு சத்தியாக்கிரகத்தில்  இருந்தோம் அதில் வந்து  இன்றைய ஜனாதிபதி அவர்கள், அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது கலந்து கொண்டார். ஜனநாயகம் என்றால் என்ன என்று ஆயுதம் தூக்கிய காவல்துறையினருக்கும் கட்டாயம் சொல்ல வேண்டும்.அரசாங்கத்தில் ஆயுதம் வைத்திருக்கின்ற அனைவருக்கும் முதலில் ஜனநாயகம் என்றால் என்ன என்று படிப்பிக்க வேண்டும் கொழும்பில் அவர்களுடைய அணுகுமுறை வேறாகவும் யாழ்ப்பாணத்தில் அணுகுமுறை வேறாகவும் காணப்படுகின்றது நல்லிணக்கம் அறவே ஏற்படாது உங்களுடைய பதவிகளை தக்க வைப்பதற்காக நீங்கள் எல்லாவற்றிற்கும் அவர்களை பீதி அடைய செய்து உங்களுடைய ஆட்சி கொண்டு செல்ல பார்க்கின்றீர்கள். அது முடியாது. முக்கியமாக இளைஞர்கள் தற்போது கொதிப்படைய தொடக்கி விட்டார்கள்  -என்று கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement